வெள்ளித்திரை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடிக்கும் புதிய திரைப்படம்!

கல்கி டெஸ்க்

திரைப்பட உலகில் தமக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நகைச்சுவையில் அனைவரையும் கவந்தவர் நடிகர் கவுண்டமணி. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களும் கண்டு ரசிக்கும்படியான திரைப்படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்து புகழ் பெற்றவர். இவரது நகைச்சுவைக்கென்ற நீண்ட நாட்கள் ஓடிய திரைப்படங்கள் பல உண்டு. 80 மற்றும் 90 காலகட்டங்களில் இவர் உடன் சேர்ந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவரது புகழ் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தது. இன்றும் கவலையை மறந்து வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்றால் அது கவுண்டமணியின் நகைச்சுவைகள்தான் என்று சொல்லுமளவுக்கு இவரது நகைச்சுவை காட்சிகள் இருக்கும்.

நகைச்சுவையில் தான் மட்டும் நடித்துப் புகழ் பெற்றால் போதாது, உடன் நடிப்பவர்களும் புகழ் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட நடிகர் கவுண்டமணி. இவருடன் சேர்ந்து நடித்து புகழ் பெற்றவர்கள் என்றால் நடிகர் செந்தில் மற்றும் வடிவேலுவை முக்கியமாகக் குறிப்பிடலாம். நடிகர் கவுண்டமணி கடைசியாக தமிழ் சினிமாவில் நடித்தது 2016ம் ஆண்டு வெளிவந்த, ‘வாய்மை’ திரைப்படத்தில்தான். அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டிருந்தார். தற்போது ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.

‘வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ தயாரிக்கும் புதிய படமான, ‘பழனிச்சாமி வாத்தியார்’ திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கவுண்டமணி, நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் கூட்டணி சேர்ந்து நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் செல்வ. அன்பரசன்.

இந்தத் திரைப்படத்தில் கவுண்டமணியுடன், யோகி பாபு, கஞ்சா கருப்பு ஆகிய இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இவர்கள் தவிர, ராதாரவி, சித்ரா லட்சுமணன், மனோபாலா போன்ற பிரபல நடிகர்களும் உடன் நடிக்கின்றனர். அடுத்த மாதம் தொடங்க உள்ளது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் சொல்லப்படுகிறது.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT