Hariharan's concert.
Hariharan's concert. Imge credit: SongKick
வெள்ளித்திரை

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதா?.. மீண்டும் மீண்டுமா?

பாரதி

நேற்று பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்டமான யாழ்ப்பாணம் இசை நிகழ்ச்சி திறந்த வெளியில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களின் அத்துமீறலால் பாதிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

பிரபல பாடகரான ஹரிஹரன், 'மழை துளி மழை துளி மண்ணில் சங்கமம்', 'என் ஜீவன்', 'கொஞ்ச நாள் பொறு தலைவா', 'உன் பேர் சொல்ல ஆசைத்தான்', 'குருக்கு சிறுத்தவலே' போன்ற நிறைய பாடல்களை பாடியிருக்கிறார். இவருடைய இசை நிகழ்ச்சி இலங்கையில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரம்பா, தமன்னா, சிவா, யோகி பாபு மற்றும் டிடி உள்ளிட்ட சில பிரபலங்களும் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் முன்பகுதி டிக்கெட்டுகளுக்கு ரூபாய் 25 ஆயிரமும், நடுப்பகுதி டிக்கெட்டுகளுக்கு ரூ 7 ஆயிரமும் பின்பகுதி டிக்கெட்டுகளுக்கு ரூ 3 ஆயிரமும் கட்டணத்தொகையாக விதிக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராவிதமாக அங்கு கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் நிகழ்ச்சியின் தடுப்பைத் தாண்டி கட்டணம் செலுத்தியவர்கள் பகுதிக்கு அத்துமீறி கூச்சலிட்டுக்கொண்டே நுழைய ஆரம்பித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பிரபலங்களும் எவ்வளவோ சொல்லியும் மேடை, ஒலி கருவிகள் வைத்திருந்த மேடை, மரங்கள் என அனைத்தின் மீதும் ஏறி ரசிகர்கள் அட்டகாசம் செய்தனர். இதனால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. போலிசார்கள் தடியடி நடத்தியப்பிறகே கூட்டம் கலைந்தது. பின் மீண்டும் நிகழ்ச்சியைத் தொடங்கி அவசர அவசரமாக முடித்ததாக தகவல் வெளியாகிவுள்ளன.

இதற்கு காரணம் நிகழ்ச்சியை சரியாக ஏற்பாடு செய்யாததுதான் என்று பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் நிகச்சியின் இயக்குனர் டீமில் உள்ள ஒருவர் இதனைப் பற்றி கூறினார்.

"எங்கள் கணக்குப்படி 30 ஆயிரம் பார்வையாளர்கள்தான் வருவார்கள் என்று எண்ணினோம். ஆனால் கிட்டத்தட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் பார்வையாளர்கள் கூடிவிட்டனர். நிகழ்ச்சியை சரியாகத்தான் ஏற்பாடு செய்தோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை. அந்த மோசமான நிகழ்வுக்குப் பிறகு நிகழ்ச்சி சரியாகத்தான் நடந்து முடிந்தது. விரைவாக எதுவும் முடிக்கவில்லை. சிலர் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்” என அவர் கூறினார்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT