Actor 
வெள்ளித்திரை

ஒரு வருடத்திற்கு 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் இவர்தான்!

பாரதி

ஒரு வருடத்திற்கு ஐந்தாறு படங்களில் நடிப்பதே ஒரு நடிகருக்கு மிகவும் கஷ்டமான ஒன்று. அந்தவகையில் இந்த நடிகர் ஒரு வருடத்திற்கு 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனையே படைத்திருக்கிறார்.

ஒரு நடிகர் ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 10 படங்களில் நடிக்கலாம். ஆனால், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் ஒரு ஆண்டிற்கு 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதைனைப் படைத்திருக்கிறார். ஆம்! தென்னிந்திய காமெடி நடிகராக வலம் வரும் இவர், தமிழிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். குறிப்பாக 'மொழி' படத்தில் இவருடைய கதாபாத்திரம் அவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்.  1986-ம் ஆண்டு முதல் இப்போது வரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வாங்கிய பத்மஸ்ரீ விருதும் பல மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று.

தெலுங்கில் மட்டும் இவர் சுமார் 754 படங்களில் நடித்திருக்கிறார். இதனால், ஒரே மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்த சாதனையாளர் என்பதற்காகவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். அதேபோல் தெலுங்கு திரைப்பட துறையில் Greatest Comedian என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

நடிகர் பிரம்மானந்தம் தனது தனித்துவமான நடிப்பால், உடல் மொழியால், முகபாவங்களால், மக்களின் மனதைக் கவர்ந்தவர். தனது இயற்கையான நடிப்பை வெளிகாட்டி,எப்போதும் மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்.

முதலில் ஒரு ஆசிரியராக பணிபுரிந்த இவர், நாடகம் நடிப்பதிலும் ஆர்வமாக இருந்து வந்தார். அதன்மூலமே அவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தன. மிமிக்கிரி மூலம் தனக்கு வந்த வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மற்ற திறைமைகளையும் வெளிப்படுத்தினார். நடிப்புத் தொழிலுடன் பிரம்மானந்தம் சிற்பக் கலையிலும் ஓவியம் வரைவதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இவர் சிற்பம் செய்வது போலவும், ஓவியம் வரைவது போலவும் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தனது திறமை மூலம் மட்டுமே பிரம்மானந்தம் இந்தளவுக்கு பெரிய ஆளாக மாறினார். திரைத்துறையில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிய இவரே, இந்தியாவின் பணக்கார காமெடியனாவார்.  இவரின் சொத்து மதிப்பு ரூ.490 கோடி ஆகும். ஒரு படத்திற்கு இவர் வாங்கும் சம்பளம் 2.5 கோடி ஆகும்.

திறமைக்கு ஏற்ற சம்பளமாகவே இது கருதப்படுகிறது. இவர் வாங்கும் சம்பளத்தைவிட, மக்களின் அன்பையே அதிகமாக பெற்றிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT