வெள்ளித்திரை

"அரசியலில் குதிப்பேன் " வாணிபோஜன்!

ராகவ்குமார்

அரசியலும் துரோகமும் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தது. தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் எப்போதும் பரபரப்பான அரசியலுக்கு பெயர் பெற்றது. திராவக வீச்சு, மோதிரகையால் அடிப்பது என வன்முறை அரசியலை  அரங்கேற்றிய நகரம் விருதுநகர். இதற்குள் குடும்ப, ஜாதி அரசியலும் உண்டு.

இந்த விருதுநகர் அரசியல் களத்தை மைய்யமாக வைத்து செங்களம் என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார் S.R.பிரபாகரன். இவர் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர். அபி அண்ட் அபி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது. இந்த தொடர் ஜீ 5 ஒரிஜினல் தளத்தில் வெளியாகிறது. வாணி போஜன், கதிர், விஜி சந்திர சேகர் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். பெண் அரசியல்வாதியாக வாணி போஜன் நடிக்கிறார்.

இந்த தொடரின் ட்ரைலர் மற்றும் சில கேரக்டர்களை பார்க்கும் போது, விருதுநகர் அரசியலின் முகங்களாக இருக்கும் தாமரைகனியும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் நம் நினைவுக்கு வந்து போவதை   தவிர்க்க இயலாது. இது கடந்த  முப்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில்  நடக்கும் அரசியல் கதை என்று ஒரு வரியில் பதில் சொல்கிறார் டைரக்டர். 

இந்த தொடரின் ப்ரோமோஷன் விழாவில் பேசிய வாணி போஜன் "டைரக்டர் என்னை நடிக்க அழைத்த போது என் அப்பாவுக்கு உடல் நிலை மோசமாக இருந்ததால் நடிக்க மறுத்தேன்.பிறகு அப்பாவும் படக்குழுவும் தந்த நம்பிக்கை வார்த்தைகளால் நடித்தேன். மறுத்திருந்தால் நல்ல வாய்ப்பை இழந்திருப்பேன். இந்த தொடரில் நடித்த பிறகு எனக்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்து விட்டது. எந்த கட்சியில் சேர்வேன் என்று இப்போது சொல்ல மாட்டேன். தொடர் வெளியான பிறகு சொல்வேன்" என்கிறார். 

வாணி போஜன் அரசியலுக்கு வந்தால் குஷ்பு, ரோஜா வரிசையில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகையாக  இருப்பார். திரில்லர் தொடர்கள் , அயலி போன்ற சமூக அக்கறை தொடர் தந்த ஜீ 5 தற்போது யாரும் யோசனை செய்யாத அரசியல் திரில்லர் தொடரை தர உள்ளது. செங்களம் தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் களத்தை சொல்ல போகிறது என்பது உண்மை.

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

பலாக் கொட்டையின் வியக்க வைக்கும் அற்புதப் பலன்கள்!

ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதால் இவ்வளவு நன்மைகளா? 

மகாராஷ்திராவின் பெருமையாகக் கருதப்படும் Puneri pagadi தலைப்பாகை!

இராமாயண பெருமை பேசும் வால்மீகி பவன் எங்கிருக்கிறது தெரியுமா?

SCROLL FOR NEXT