இரவின் நிழல்
இரவின் நிழல் 
வெள்ளித்திரை

இயக்குனர் பார்த்திபன் பொய் சொல்கிறாரா ? அமேசான் சர்ச்சை குறிப்பு !

கல்கி டெஸ்க்

இயக்குனர் பார்த்திபனை அமேசான் பிரைம் நிறுவனம் பயங்கரமாக அசிங்கப்படுத்தி இருக்கிறது என்று பரவலாக தகவல் பரவிவருகிறது. தமிழில் திரையுலகில் நடிகராகவும், இயக்குனராகவும் இருப்பவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கிநடித்திருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், யூடியூப் பிரபலம் பிரிகிடா, ரேகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர். பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். உலக அளவில் முதல் நான் லீனியர்சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் உருவானதாக படக்குழுவால் சொல்லப்பட்டது. 64 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் மற்றும் நகராத செட்டுகள் மூலம் காட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் படத்திற்கு பல்வேறு பாராட்டுகளும், நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.

பார்த்திபன்

பார்த்திபன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்என்றும் அமேசான் நிறுவனம் “இரவின் நிழல்” படத்தின் குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. இந்தத் திரைப்படம் உலகத்திலேயே முதன் முறையாகஎடுக்கப்பட்ட நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று பார்த்திபன் தொடர்ந்து கூறி வந்தார். பலரும் இந்த முறையில் எடுக்கப்பட்ட முதல் படம் இரவின் நிழல் இல்லை, அதற்கு முன்பே ஹாலிவுட் படம் வெளிவந்துள்ளதாக ஆதாரங்களுடன் கூறி வந்தனர்.

இந்நிலையில் தான் இரவின் நிழல் திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தான் . இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் சார்ட் திரைப்படம் இல்லை. இது முதல் நான் லீனியர் படம் என்று இந்த படத்தின் இயக்குனர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என்று படத்தின் குறிப்பில் அமேசான்ப்ரைம் ஓடிடி நிறுவனம் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறது. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டிய வெளி பாதுகாப்பு குறிப்புகள்!

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

SCROLL FOR NEXT