பெண்கள் தங்களின் தொப்பையை ஆடைகள் பயன்படுத்திக்கூட மறைக்கலாம். எப்படி என்று பார்ப்போமா?
பெண்கள் பலருக்கும் உள்ள ஒரு தொல்லை தொப்பை. அதுவும் சில உடைகள் போடும்போது தொப்பை நன்றாகத் தெரிந்து அசிங்கப்படுத்திவிடும். இதனால், அந்த தொப்பையை மறைக்க உடற்பயிற்சி செய்வோம், ஜிம் போவோம், டயட் இருப்போம். ஆனால் அப்பவும் தொப்பை குறைந்தப்பாடு இருக்காது. மேலும் இது நமக்கு சோகத்தைதான் ஏற்படுத்தும். இந்த சிரமங்களையெல்லாம் குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்.
இறுக்கமான உடைகளைத் தவிறுங்கள்:
இறுக்கமாக உடை அணிந்தால் நமது உடம்பின் அமைப்பை அப்படியே காட்டிக்கொடுத்துவிடும். ஆகையால், லூஸ் ட்ரெஸ்களை அணியுங்கள். அதாவது நீங்கள் எப்போதும் போடும் அளவைவிட ஒரு அளவு அதிகமாக வாங்கிப் பயன்படுத்துங்கள்.
இந்தவகை நிறங்களை அணியுங்கள்:
நமது உடலுக்கேற்ற நிறங்களை அணியுங்கள். அதாவது டார்க் நிற உடைகளை அணிவது நமது இடுப்பு சதை, சுருக்கம், தொப்பை ஆகியவற்றை வெளியில் காட்டாமல் இருக்கும். அதனால், கருப்பு, பழுப்பு, சிவப்பு, சாம்பல் நிறம் உள்ளிட்ட நிற ஆடைகளை அணியலாம்.
கட்டம் போட்ட ஆடைகள்:
கோடு போட்ட உடைகளை அணியும் போது உடல் எடையையும் தொப்பையையும் மறைக்க முடியும். அதிலும் செங்குத்தான நேர்கோடுகள் கொண்ட ஆடைகளை அணிவது உடல் அமைப்பை கொஞ்சம் ஒல்லியாக காண்பிக்கும். அதேபோல் சிறு சிறு கட்டங்கள் போட்ட சட்டைகளை அணிவது நல்லது. பெரிய கட்டங்களைத் தவிர்க்கவும்.
உடல் அமைப்பிற்கு ஏற்ற size:
மிகவும் லூஸாக உடை அணிய விரும்பாதவர்கள், உங்கள் உடம்புக்கு சரியாக இருக்கக்கூடிய உடைகளை வாங்கி அணியலாம். குறிப்பாக Georgette மற்றும் Chiffon Fabric உள்ள டாப் வகைகளைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் தொப்பையை வெளியே எடுத்துக் காண்பிக்காது.
தொப்பை உள்ளவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய இரண்டு உடைகள்:
Asymmetrical Top மற்றும் Wrap top. இவை இரண்டையும் நீங்கள் உங்கள் உடம்புக்கேற்ற அளவிலேயே வாங்கி அணியலாம். எப்போது எந்த ட்ரெஸ் வாங்கிப் போட்டாலும் வசதியாக இருக்கும். தொப்பையே தெரியாது.
இனி நீங்கள் தொப்பையை குறைக்க முடியாமல் தவிக்கும்போது இதுபோன்ற ஆடைகளை அணிந்து வெளியே செல்லலாம்.