pbs.twimg.com
வெள்ளித்திரை

‘கடைசி விவசாயி’ திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதை ஒப்படைத்த கொள்ளையர்கள்!

கல்கி டெஸ்க்

டைசி விவசாயி திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது, அவரின் வீட்டில் இருந்த நகைகள், பணம் மற்றும் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி படத்திற்காக அளிக்கப்பட்ட தேசிய விருதுகளையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். 

இயக்குநர் மணிகண்டன் காக்கா முட்டை, கடைசி விவசாயி திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர். தமிழ் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இவர்,  காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படங்கள் தேசிய விருதுகளை வென்றன.

தற்போது சென்னையில் வசித்துவரும் இயக்குநர் மணிகண்டனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில்நகரில் உள்ளது. திரைப்படம் தொடர்பாக கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சென்னையில் மணிகண்டன் இருந்து வரும் நிலையில், உசிலம்பட்டியில் உள்ள வீட்டை, மணிகண்டனின் ஓட்டுநர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் பராமரித்து வந்துள்ளனர். மேலும், அந்த வீட்டில் உள்ள நாய்க்கும் அவர்கள் தினசரி உணவு அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்கு உணவு வைக்கச் சென்ற நரேஷ்குமார், வீட்டின் கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  போலீசாரின் சோதனையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்க நகையுடன், கடைசி விவசாயி படத்துக்காக வாங்கிய 2 தேசிய விருது பதக்கங்களையும்  கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தேசிய விருதுகளை மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பு பாலிதின் பையில் வைத்து அதனுடன் ஒரு கடிதத்தையும் விட்டுச்சென்றுள்ளனர். அதில் “அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கு” என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT