வெள்ளித்திரை

வைரலாகும் கமல்ஹாசனின் ‘KH234’ படத்தின் வீடியோ!

எல்.ரேணுகாதேவி

மல்ஹாசன் - மணிரத்னம் காம்போவில் உருவாகும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’ படத்திலும் இயக்குநர்கள் மணிரத்னம், ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், மணிரத்னம் இயக்கவுள்ள KH234 படத்தின் ப்ரொமோ நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதேபோல், KH234 படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் KH234 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நாயகன் படத்தில் கமல் பேசும் ”நான் அடிச்ச நீ செத்துருவ” எனும் டயலாக்கில் இருந்து தொடங்குகிறது. 1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் வெளியானது. அந்த ஆண்டை குறிப்பிட்டு அதன்பிறகு 37 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள KH234 படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் ’நாயகன்’ படம் தற்போதுவரை மிக முக்கியமான படமாக பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மீண்டும் இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் KH234 படம் என்னமாதிரியான கதைகளத்தை கொண்டுள்ளதாக இருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், நாயகன் படத்தைபோல் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த முறையும் மணிரத்னம் முயற்சி கொள்வாரா? அல்லது மணிரத்னம்பாணியிலான படமாக இருக்குமா என பல கேள்விகள் எழுந்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவுச் செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங், சண்டைபயிற்சி அன்பறிவு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

கவிதை - மாற்றம் வேண்டும்!

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

SCROLL FOR NEXT