வெள்ளித்திரை

"பணம் உலகை காலி பண்ணிடும்" - பிச்சைகாரன் 2 அப்டேட்ஸ்!

கல்கி டெஸ்க்

நடிகர் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிச்சைக்காரன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் சக்கை போடு போட்ட வெற்றி திரைப்படம்.இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்ஆண்டனி இயக்கியுள்ளார்.

பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் எனஎதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் எனஅறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப்படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழு மலேசியா சென்றது. அங்குபடப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனிக்குபலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த விஜய் ஆண்டனி கடந்தஇரண்டாம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில்,

'அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்துவிட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான்இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும்ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல்தொடங்குகிறேன் அன்புக்கு நன்றி' என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட்ரசிகர்களை நிம்மதியடைய செய்தது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் குறித்த அப்டேட் நேற்று மாலை 5 மணிக்குவெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'பணம் உலகை காலிபண்ணிடும்' என்ற வாசகத்தோடு வெளியாகியிருக்கும் அப்டேட்டில், பிச்சைக்காரன்2 படத்தின் முதல் 4 நிமிட ஸ்னீக் பீக் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்குவெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படமானது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!

சங்கு ஒலிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய சில மரங்களும் அவற்றின் பயன்களும்!

இந்தியா வந்த வணிகக் கப்பலை தாக்கிய ஹவுதி படை…!

T20 World Cup: “அணியில் இளம் வீரர்கள் நிறையே பேர் வேண்டும். விராட், ரோஹித் வேண்டாம்.” – யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT