Vijayantony 
வெள்ளித்திரை

தனது மகள் குறித்து உருக்கமான கடிதம் வெளியிட்டார் விஜய் ஆண்டனி!

விஜி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தன்னுடைய மகள் குறித்த கடிதம் ஒன்றை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் .

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, பல ஹிட் பாடல்களை கொடுத்து நடிகராகவும், பாடகராகவும் அசத்தி வருகிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் 2006ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு மீரா,லாரா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவரின் முதல் மகளான மீரா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், 3 நாட்களுக்கு முன்பு மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வாழ்க்கையில் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளுக்கு தற்கொலை எப்போதும் தீர்வாகாது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தற்கொலை எண்ணம் தோன்றினால் தற்கொலை தடுப்பு மையங்கடிள தொடர்புக்கொண்டு ஆலோசனைப் பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். அல்லது தன்னார்வ தற்கொலை தடுப்பு மையமான சிநேகா தொண்டு நிறுவனத்திதை Contact: இ மெயில் help@snehaindia.org, தொலைபேசி மூலமாக +91 44 2464 0050  +91 44 2464 0060  தொடர்புகொள்ளமுடியும்.

இந்நிலையில், விஜய் ஆண்டனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை,வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள் என்று கூறியுள்ளார்.

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

வீழ்வது தவறல்ல… வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு!

Biggboss 8: பழி தீர்க்கும் சவுந்தர்யா… வசமாக மாட்டிக்கொண்ட விஷால், தீபக், ராயன்!

25000க்கும் மேற்பட்ட எலிகள் ஓடும் கோயில்... அடக் கடவுளே!

இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன?

SCROLL FOR NEXT