annapoorani
annapoorani 
வெள்ளித்திரை

நயன்தாராவின் 75வது படமான ’அன்னபூரணி’ ட்ரைலர் வெளியானது!

பாரதி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, கார்த்திக் குமார், குமாரி சச்சு, அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜீ  ஸ்டூடியோஸ் ட்ரைடண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் நாட் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது.சத்யன் சூர்யா ஒளிப்பபதிவு செய்துள்ளார்.

மேலும் பிரவின் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்னர் அன்னபூரணி படத்தின் டீசர் வெளியானது. ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த நயன்தாரா அசைவ உணவு புத்தகத்தை மறைத்து வைத்து பார்ப்பது போல் டீசர் வெளியானது. அதன் மூலம் அன்னபூரணி படம் ஆச்சாரம் நிறைந்த வீட்டில் பிறந்த ஒரு பெண்ணின் அசைவ ஆசைப் பற்றிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாராவின் பிறந்தநாளான நவம்பர் 18ம் தேதி படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மூன்று நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் Life is on என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனையடுத்து, இன்று மாலை 6.30 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. டிசம்பர் 1ம் தேதி ரிலீசாகும் இப்படத்திற்கு போட்டியாக, அதே நாளில் பார்க்கிங், வா வரலாம் வா ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.

ராஜா ராணி படத்திற்கு பின்னர் நயந்தாரா,ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் இனைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.

மேலும் இந்த எதிர்பார்ப்பு ட்ரைலர் வெளியீட்டு நாளன்றே தெரிந்துவிட்டது. ஏனெனில், அன்னபூரணி படம்  X தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சமீபத்தில், நயந்தாரா ஷாருக்கானுடன் நடித்து வெளியான ஜவான் படம் பெரிய ஹிட் கொடுத்தது. அதனையடுத்து, அன்னபூரணி படத்திற்கு பின்னர் மன்னாங்கட்டி என்ற படம் நயந்தாரா நடிப்பில் வெளியாகவுள்ளது. சென்ற மாதம்தான் நயந்தாரா போஸ்டருடன் அந்த படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டது.

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Personal Finance: இந்திய சாமானியர்களுக்கான அத்தியாவசிய நிதிக் குறிப்புகள்! 

உறவுகளை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

உங்களை சிறப்பான நபராக மாற்ற உதவும் 3 அடிப்படைக் கேள்விகள்!

SCROLL FOR NEXT