kalki movie team 
வெள்ளித்திரை

கல்கி 2898 படத்தின் போட்டோ இணையத்தில் வைரல்.. இன்று மாலை வெளியாகும் முக்கிய அப்டேட்!

பாரதி

பிரபாஸ், கமலஹாசன் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் கல்கி படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. கமலஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் போன்றப் பிரபல ஹீரோ, ஹீரோயின்கள் நடித்து வரும் இப்படம் மே மாதம் 9ம் தேதித் திரைக்கு வரும் என்றுப் படக்குழு அறிவித்தது.

அந்தவகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் தனது X தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. படக்குழுவின் புகைப்படம், திஷாவுடன் பிரபாஸ் இருக்கும் புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டது. ஒரு பாடல் படப்பிடிப்பிற்காக இத்தாலிக்குச் சென்று படக்குழு திரும்பியுள்ளது.

அந்தப் புகைப்படங்களை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் திஷா பதானியும் பிரபாஸும் சேர்ந்து எடுத்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்குப் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிடப் போவதாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் What's his name? என்ற கேள்வியை எழுப்பி எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இதன்மூலம் கல்கி படத்தில் பிரபாஸ் கதாப்பாத்திரத்தின் பெயரை வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கல்கி படத்தின் படப்பிடிப்பு வேலையும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. அப்போதுதான் படத்தை விரைவில் முடிக்க முடியும் என்பதால் இயக்குனர் இந்த முடிவை எடுத்துள்ளார். முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் பாடல் மற்றும் சில பேட்ச் வொர்க் காட்சிகள் மட்டும் படம் பிடிக்க வேண்டும். இப்படத்தில் தீபிகா படுகோன் தனது காட்சிகள் அனைத்தையும் நடித்து முடித்த பிறகுதான், தான் கர்ப்பமாகிவுள்ளதாகச் செய்தி வெளியிட்டார். அதேபோல் அமிதாப் பச்சனுக்கும் ஒரு சண்டைக் காட்சி படம்பிடிக்கும்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் ஓய்வில் உள்ளார்.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் கமலும் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படம் 3101 BCE யிலிருந்து 2898  AD வரையுள்ள காலக்கட்டத்தின் கதைக்களமாக இருக்கும் என்றும் கிருஷ்ணனின் கடைசி அவதாரம் பற்றிய படம் என்றும் இயக்குனர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT