Premalatha vijayakanth  
வெள்ளித்திரை

GOAT படத்திற்கு பிரேமலதா வைத்த செக்... விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி இல்லை!

விஜி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவத்தை ஏ,ஐ.டெக்னாலஜி மூலம் திரையில் கொண்டு வருவது குறித்து தன்னிடம் யாரும் அனுமதி வாங்கவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார்.

The GOAT திரைப்படம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் படம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவரின் கேரக்டரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருப்பதாகவும், விஜய்யும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் படத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கேப்டன் விஜயாகந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி தான் படக்குழு இதற்கான வேலைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கூட சின்ன சின்ன கண்கள் பாடலை ஏஐ மூலம் மறைந்த பாடகியும் வெங்கட்பிரபுவின் தங்கையுமான பவதாரிணி குரலில் பாட வைத்திருந்தனர். இது பலரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AU TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள். ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’’ என கூறியுள்ளார்.

இந்த புகாரால் GOAT படத்திற்கு சிக்கல் வருமா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விஜய் அரசியல் வந்த பிறகு வெளியாக போகும் முதல் படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT