கேம் சேஞ்சர் 
வெள்ளித்திரை

‘கேம் சேஞ்சர்’ ரிலீசாவதற்கு முன்பே ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய அமேசான்!

விஜி

இயக்குநர் ஷங்கரின். ‘கேம் சேஞ்சர்’ படத்தை அமேசான் நிறுவனம் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில், ஊழலுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டு வெளியான, ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து நீண்ட ஆண்டுகள் கழித்து, ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார்.

அதற்காக நடிகர் கமலஹாசன் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக படம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மீண்டும் தற்போது தொடங்கி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பாதியில் நின்றபோது இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரண் நடிப்பில், ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கத் தொடங்கினார்‌. இந்தப் படத்தை ‘தில்’ ராஜூ தயாரிக்கிறார். கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நடிகர் சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அமேசான் ஈவண்ட்டின் மூலம் இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதுவும் தியேட்டர் ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாக அறிவித்துள்ளனர். அதோடு, ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதையையும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அரசியலில் நடக்கும் ஊழலை ஒழிக்க தேர்தலில் நியாயமான முறையில் போட்டியிட்டு எப்படி ஆட்சியை மாற்றியமைக்கிறார் என்பதுதான் படம். சுமார்150 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இ,து ‘கங்குவா’ படத்தை விட 50 கோடி ரூபாய் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT