Raayan 
வெள்ளித்திரை

ராயன் பட ஆடியோ லாஞ்ச் எப்போது? மாஸ் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

விஜி

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ், தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனுஷ் தனது 50-ஆவது படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் தான் ‘ராயன்’ இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் நடிகர் தனுஷ். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று படக்கிழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மானின் கான்செர்ட் நடைபெறும் எனவும், மேலும் இதுவரை தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை வரவைத்து அவர்களை சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலையடுத்து தனுஷ் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

இந்த விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் நேரம் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. ‘ராயன் ரம்புள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பாடல், குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்கம் செய்துள்ளார். தனுஷ் எழுத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த பாடலை தனுஷ் - ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக உள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் வைப் செய்தநிலையில் இயக்குனர் செல்வ ராகவனும் பாடலை வெகுவாக பாராட்டியிருந்தார்.

தனுஷ், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்து முதல் முறை பாடியுள்ளது இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. வடசென்னையை மையமாக வைத்து கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT