Varisu - Thunivu
Varisu - Thunivu 
வெள்ளித்திரை

வாரிசு படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்!

கல்கி டெஸ்க்

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தை மிகவும் முக்கியமான மூன்று இடங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியானது. இதனிடையே அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் விஜய்யின் வாரிசு படத்துக்கு போட்டியாக வெளியிட அப்படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்த இரண்டு படங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் எந்த படத்தின் உரிமையை கைப்பற்றப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு சினிமா உலகினில் இருந்து வந்தது. அதன்படி அந்நிறுவனம் இரண்டு படங்களின் ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றும் முனைப்பில் இருந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் ஏற்கனவே அஜித் நடிக்கும் 'துணிவு' திரைப்படத்தை வாங்கிவிட்ட உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம், தற்போது 'வாரிசு' திரைப்படத்தை மிகவும் முக்கியமான மூன்று இடங்களில் கைப்பற்றியது பரபரப்பாகியுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், தளபதி விஜய் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. மிகப் பிரமாண்டமாக உருவாக்கிய இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சங்கீதா, ஷியாம், சரத்குமார், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், படத்தின் வியாபாரம் மற்றும் புரோமோஷன் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தற்போது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாரிசு திரைப்படத்தை கைப்பற்றியது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரே நிறுவனத்தின் வெளியீடான இரு படங்களும் பொங்கலுக்கு நேரடி போட்டியாக களம் இறங்கவுள்ள நிலையில் ஜெயிக்கப்போவது தளபதியின் வாரிசா? 'தல' யின் துணிவா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

'என் ஹீரோ' என தன் காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா!

சிறுகதை - இலவசங்கள் விற்பனைக்கு!

ஜெர்சி நம்பர் '7' ஏன் அனைவருக்கும் பிடித்திருக்கிறது?

கோடைக்காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?

சுற்றுச்சூழலை பராமரிக்கும் சதுப்பு நிலங்கள்! 

SCROLL FOR NEXT