வெள்ளித்திரை

‘சர்தார்’ இயக்குநருக்கு கார் பரிசு!

எம்.கோதண்டபாணி

‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம், ‘சர்தார்.’ P.S.மித்ரன் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், அரசியல், கமர்ஷியல், மசாலா, காமெடி என அனைத்தும் சரியான விகிதத்தில் அமைந்ததால், உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் இப்படத்துக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு, ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை அன்புப் பரிசாக அளித்துள்ளார். இந்தக் கார் பரிசை நடிகர் கார்த்தி, இயக்குநர் P.S.மித்ரனுக்கு வழங்கினார்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து வெளியான, ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றிப் பட வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சர்தார்’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் நடிகர் கார்த்தி ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT