சில வருடங்களுக்கு முன் கர்நாடக இசையில் அமைந்த "பாக்கியாத லக்ஷ்மி பாரம்மா" என்ற பாடலை ஒரு சிறுமி பாடி பிரபாலாமானது. யார் இந்த சிறுமி என்ற கேள்விக்கு விடையாக உத்ரா உன்னி கிருஷ்ணன் என்று விடை கிடைத்தது. உத்ரா பிரபல கர்நாடக மற்றும் திரையிசை பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களின் மகள்.
உத்ரா பாடகி சைந்தவி அவர்களின் இல்ல விழாவில் பாடியதை பார்த்து பிடித்து போன ஜி. வி பிரகாஷ் AL விஜய் இயக்கிய சைவம் படத்தில் பாட வாய்ப்பு தந்தார். 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் ''அழகே" எனத் தொடங்கும் பாடலை பாடினார் உத்ரா.
இப்பாடலை பாடியதற்க்கு உத்ராவிற்க்கு தேசிய விருது கிடைத்தது. இந்த விருதை பெறும் போது உத்ராவிற்க்கு வயது 10 மட்டுமே. மிகக் குறைந்த வயதில் இந்த விருதை பெறும் பெருமைக்குரியவரானார் உத்ரா.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவரது தந்தை உன்னி கிருஷ்ணன்,1994 ஆம் ஆண்டு ஏ. ஆர் ரஹ்மான் இசையில் உருவான காதலன் படத்தில் இடம் பெற்ற என்னவளே அடி என்னவளே பாடல் பாடியாதற்க்கு தேசிய விருது பெற்றார்.
இது உன்னிக்கு முதல் பாடல். மகளும் 2014 ஆம் ஆண்டு முதல் பாடலிலேயே தேசிய விருது பெற்றார்.
தெறி, பிசாசு படத்தில் உத்ரா பாடிய பாடல்கள் இன்னமும் மக்களிடையே அதிக அளவில் கொண்டுபோய் சேர்த்தன.ஏ. ஆர் ரஹ்மான் உட்பட பல்வேறு இசையமை ப்பாளர்கள் இசையில் ஆல்பங்களுக்கு பாடியுள்ளார் உத்ரா. கர்நாடக இசையில் பலவேறு கச்சேரிகள் செய்து வருகிறார் உத்ரா. தியாக பிரம்த்தின் கீர்த்தனையான சீதா கல்யாண வைபோகமே பாடல் உத்ரா பாடியது பலரால் விரும்பி கேட்கப்படுகிறது.
உத்ரா தற்சமயம் கல்லூரியில் சைக்கலாஜி படித்து வருகிறார் இசை தான் என் துறை. சைக்காலாஜி மனிதர்களை புரிந்து கொள்ள என்கிறார் உத்ரா. இவரின் இசைப்பயணம் சிறக்க வாழ்தது வோம்.