விதுசாயினி 
விதுசாயினி  
வெள்ளித்திரை

டொரன்டோவிருந்து வந்த பாடகி விதுசாயினி!

லதானந்த்

கே.ஜே.எஸ். மீடியா புரோடக்ஷன்ஸ்  கலசா ஜே.செல்வம் தயாரிக்கும் திகில் திரைப்படம்  ‘கொத்தங்கோடு பங்களா’.  

இந்த படத்தில், புஷ்பா உட்பட பல திரைப்படங்களில் பாடல்களை எழுதிய விவேகா பாடல்கள் அனைத்தும் எழுதுகிறார்.  இத்திரைப்படத்தின் சிறப்பு, இசையமைப்பாளர் விது பாலாஜி கதாநாயகனாக நடிப்பதுதான். 

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டூயட் பாடலின் ஒளிப்பதிவு சென்னையில் நடைபெற்றது. இப்பாடலைப் பாட, பாடகி விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாகக் கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார். இவர் 2019ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய, ‘லைவ் இன் கான்செர்ட்’  நிகழ்ச்சியில் பாடுவதற்காகச் சென்னைக்கு வரவழைக்கப்பட்டவர்.

இவர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் 'மாதரே' எனும் பாடலை சின்மயியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார். அதன் பிறகு 2022ஆம் ஆண்டு ‘கொத்தங்கோடு பங்களா’ திரைப்படத்தில் பாடுவதற்காக வரவழைக்கப்பட்டு இருக்கிறார். 

 இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் விது பாலாஜியிடம் கேட்டபோது “இந்தப் பாடல் வித்தியாசமான  காதல் பாடல். இதற்கு வசீகரமான ஒரு குரல் தேவைப்பட்ட காரணத்தால் நானும் இயக்குனரும் கலந்து உரையாடி, இவரை கனடாவில் இருந்து வரவழைத்தோம்.

விதுசாயினி 

இந்தியாவிலேயே 50க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரே மகத்தான இசைக் கலைஞர் இப்பாடலின் பின்னணி சேர்திருப்பது மற்றும் ஒரு சுவாரசியமான நிகழ்வு” என்றார். 

இத்திரைப்படத்தில் நாயகன் விது பாலாஜிக்கு இரண்டு கதாநாயகிகள். ஒருவர் கொல்கத்தாவில் பிரபலமான மாடல்; மற்றொருவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர். 

இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலாச ஜே.செல்வம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் 15 ஆண்டுகளாக ஒலிப்பதிவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே மிகச்சிறிய நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில்!

உறையும் அதிசய நீர்வீழ்ச்சி இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?

Vasuki Indicus: 47 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய பாம்பு!

தன்னம்பிக்கை வளர நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

4 Types of Introverts: நீங்கள் இதில் எந்த வகை!

SCROLL FOR NEXT