Sivakarthikeyan  
வெள்ளித்திரை

லீக்கானது எஸ்கே 24 டைட்டில்.. ரசிகர்கள் உற்சாகம்!

விஜி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் 24வது படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கனா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அதேபோல் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது கமல்ஹாசனின், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் SK 23 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

அந்த வகையில் டான் படத்தின் மூலம் கவனம் பெற்ற சிபி சக்ரவர்த்தி தான் சிவகார்த்திகேயனின் அடுத்த பட எஸ்கே 24 இயக்குனர். இதில் ஹீரோயின் ஆக ராஷ்மிகாவும் வில்லனாக எஸ் ஜே சூர்யாவும் இணைந்துள்ளனர். தற்போது தனுசுடன் குபேரா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா புஷ்பா 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். ஏற்கனவே நெட்டிசன்கள் இவரை கிரிஞ்ச் நடிகை, எக்ஸ்பிரஷன் குயின் என கிண்டல் அடிப்பதுண்டு அதேபோல் டான் பட இயக்குனரையும் கிரிஞ்ச் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் ரஜினி படத்தை இயக்கும் அளவுக்கு இவருக்கு வாய்ப்பு வந்தும் அதை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனாலயே டான் படம் வெளிவந்து இதனை வருடங்கள் ஆகியும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுவும் சிவகார்த்திகேயன் இவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ஆக மொத்தம் இந்த கூட்டணி மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் SK 24 படத்திற்கு 'பாஸ்' என டைட்டில் வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நல்லாதான் இருக்கு டைட்டில் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT