இப்போது உள்ள ஹீரோக்களில் அதிகம் எதிர்மறை செய்திகளால் ஊடகங்களில் விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் சிம்புவாகத்தான் இருப்பார். இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநாடு என்ற வெற்றிப்படத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு தந்தார். அதன் பின்பு வெந்து தணிந்தது காடு, பத்துதல படங்களில் திரும்பி பார்க்க வைத்தார்.பத்து தல படத்தில் இசையமைக்க சிம்பு தான் காரணம் என்று வெளிப்படையாக சொன்னார் ரஹ்மான். மீண்டும் ரஹ்மான் சிம்பு கூட்டணியில் புதிய படம் தயாராக உள்ளது.
இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கமல்ஹாசன் தயாரிக் கிறார். கமலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்தை தேசிங் பெரிய சாமி இயக்குகிறார். சிம்புவின் 48 ஆவது படமாக வரவுள்ள இப்படத்தை STR 48 என்று அழைக்கிறது சினிமா வட்டாரம்.
பத்து தல படம் வெளியான பின்பு சிம்பு அயல்நாடு சென்று மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டார். இதைக்கற்றுக்கொண்டது STR 48 படத்திற்க்காகதான் என்கிறார்கள் சிம்புவின் நண்பர்கள். இது வரலாறு காலங்களில் நடக்கும் கதையாம். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. ரஹ்மான் சிம்பு கூட்டணியில் இது ஆறாவது படம். கமல் இப்படத்தை தயாரிக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு தமிழ் ரசிகர்களுக்கு மாஸ் திருவிழா திரையில் காத்திருக்கிறது