இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பது தமிழ் சினிமா. தமிழ் சினிமாவில் பணியாற்றிய எண்ணற்ற கலைஞர்கள் தங்களுடைய திறமைகள் மூலம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அப்படி தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக இருந்தவர்கள்தான் மெல்லிசை மன்னர் என்றழைக்கப்படும் எம்.எஸ்.வி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன்.. இவர் இசையமைத்த பாடல்கள் தமிழ் சினிமாவில் காலத்தில் அழியாத காவியங்களாகும். அதேபோல் மக்கள் திலகம் என போற்றப்படும் எம்ஜிஆர் தமிழ் சினிமாவின் நவரத்தினங்கள் ஒன்று.
எம்எஸ்வி மற்றும் எம்ஜிஆர் இணைந்து பல்வேறு படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். என்னுடைய படத்திற்கு எம்எஸ்விதான் இசை என எம்ஜிஆர் உறுதியாக இருந்துள்ளார். குறிப்பாக எம்எஸ்வி எம்ஜிஆர் கூட்டணியில் வெளியான ’எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பெற்றிருக்கும் நான் ஆணையிட்டால் பாடல் இன்றளவு எம்ஜிஆர் வளர்தெடுத்த அதிமுக கட்சியின் பிரச்சார பாங்களில் ஒன்றாக இன்றளவும் உள்ளது. அதேபோல் ’நாளை நமதே’ படத்தில் இடம்பெற்ற அன்பு மலர்களே.. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என எம்ஜிஆர் நடித்த நூற்றுக்கான படங்களுக்கு எம்எஸ்வி இசையமைத்துள்ளார்.
ஆனால், இசையில் ஜம்பவானாக திகழ்ந்த எம்எஸ்வியிடம் மக்கள் திலகம் ஒரு கோபித்து கொண்டாராம்.. அந்த நிகழ்வு குறித்து எம்எஸ்வி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.. ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு இசையமைத்த போது, நான் போட்ட ஒவ்வொரு பாட்டையும் ''நன்றாக இல்லை'', ''நன்றாக இல்லை'' என்று சொல்லிக் கொண்டே வந்தார் எம்ஜிஆர்.
ஏறத்தாழப் பத்து பாடல்களை ரிஜெக்ட் செய்துவிட்ட நிலையில், வாத்தியக்காரர்களுக்கு அளித்த ஊதியத் தொகை ஆயிரக் கணக்கில் போய்க் கொண்டிருந்தது. 'என்னடா! எதைப் போட்டாலும் நன்றாயில்லை' என்கிறாரே இவர் என்று எனக்கு ஒரே வெறுப்பாகிவிட்டது. திடீரென ஒரு நாள், "என்னங்க பணம் வேணாமா?" என்று எம்.ஜி.ஆர். கேட்க, "என் பாட்டுதான் உங்களுக்கு ஒண்ணுகூட பிடிக்கலையே'' என்று நான் அங்க லாய்க்க, தம்மை ஆபீசில் வந்து பார்க் கும்படி கூறிவிட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார்.
ஆபீசுக்குப் போனதும், "பாடல்கள் எல்லாம் பிரமாதம்" என்று கூறி, பணம் தந்தார். "அப்போ, ஏன் நன்றாக இல்லைன்னு சொன்னீங்க...." என்று குழப்பத்துடன் கேட்டேன். "அப்படிச் சொன்னால்தான் நீங்க இன்னும் நல்ல மெட்டுகளைப் போடுவீங்க என்ற எண்ணம் எனக்கு" என்றார்.
உடனே, "ஒரு கலைஞனுக்குப் பணத்தைவிட, பாராட்டு தான் மனசுக்கு உற்சாகமளிக்கும் டானிக். நீங்க 'நல்லா இருக்குன்னு சொல்லியிருந்தாஇதைவிடச் சிறப்பா டியூன் போட்டிருக்க முடியும்னு நான் நினைக் கிறேன்" என்றேன். எம்.ஜி.ஆர். சிரித்தார்.