Target movie review Image Credits: ClickTheCity
வெள்ளித்திரை

Target: கொரியன் திரைப்படம் பார்த்தாச்சா? இல்லையா? அச்சச்சோ மிஸ் பண்ணிடாதீங்க!

நான்சி மலர்

நம்முடைய வாழ்வில் எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. உணவு ஆர்டர் செய்ய, பொருட்கள் வாங்க, காய்கறி வாங்க என்று எதுவாக இருந்தாலும் ஆன்லைன் மூலமே செய்துக்கொள்கிறோம். நேரில் சென்று பொருட்களின் தரத்தை பரிசோதித்து, பேரம் பேசி வாங்கும் பழக்கமெல்லாம் மலையேறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில், ஆன்லைனில் நம்முடைய தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதால் எப்படிப்பட்ட ஆபத்துகளை சந்திக்க வேண்டிவரும் என்பதை பற்றித் தான் நுணுக்கமாக இந்த கதைக் கூறுகிறது.

கொரியர்கள் என்றாலே கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதையுடன் எடுக்கப்பட்டது தான் 2023 ல் வெளியான டார்க்கெட் திரைப்படம். இந்த படத்தை இயக்கியவர் Park hee-gon. இந்த படத்தில் Shin hye sun, Kim sung kyun போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஹீரோயின் Soo-hyun  ஆபீஸ் வேலைக்கு செல்லும் ஒரு சாதாரண பெண். அவருடைய வீட்டில் வாசிங் மெஷினில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால், ஏற்கனவே யாரேனும் பயன்படுத்திய வாசிங் மிஷினை குறைந்த விலையில் வாங்கலாம் என்று ஒரு ஆப்பில் பார்த்து வாங்குகிறார். ஆனால், அந்த வாசிங் மெஷினும் சரியாக வேலை செய்யாமல் போகிறது. இதனால் ஹீரோயினுக்கு பயங்கரக் கோபம். தன்னை இப்படி ஏமாற்றிய நபரை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று அந்த ஆப்பில் தேடிக் கண்டுப்பிடித்து விடுகிறார். மற்றவர்களிடம் இந்த நபர் விற்கும் பொருட்களை வாங்காதீர்கள். இவன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று சொல்கிறார். இதனால் கடுப்பான அந்த ஏமாற்றுப்பேர்வழி ஹீரோயினின் தகவல்களை வைத்து அவளை டார்ச்சர் செய்யத் தொடங்குகிறான்.

முதலில் உணவு, பொருட்கள் என்று ஹீரோயின் விலாசத்திற்கு அனுப்பி வைப்பான். பிறகு டேட்டிங் ஆப்பை பயன்படுத்தி பாய்பிரண்ட் வேணும் என்பது போல விளம்பரம் செய்யத் தொடங்குவான். இதனால் கடுப்பான ஹீரோயின் போலீசில் புகார் கொடுக்க, அதை விசாரிக்க போன போலீசுக்கு பயங்கரமான ஷாக்.

அந்த ஏமாற்றுப்பேர்வழி பயன்படுத்திய போனுக்கு சொந்தமான நபர் அவர் வீட்டிலே கொலை செய்யப்பட்டு இறந்துக் கிடப்பார். அதைக் கேட்ட ஹீரோயின் அதிர்ந்து போய்விடுவார். இத்தனை நாளாய் ஹீரோயின் பேசியது ஒரு சீரியல் கில்லரிடம். அவனுக்கு இது தான் வாடிக்கை, ஒரு நபரை Target செய்து அவரை கொலை செய்துவிட்டு அந்த நபரின் வீட்டில் இருக்கும் பொருட்களை ஆன்லைன்னில் விற்றுவிடுவான்.

இதற்கு பின் ஹீரோயின் அந்த சீரியல் கில்லரிடமிருந்து தப்பித்தாளா இல்லையா? என்பதை படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். கடைசியாக கிளைமேக்ஸில் ஒரு செம டிவிஸ்ட் இருக்கிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 3 மில்லியன் கலெக்ஷன் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது!

இனிமேலாவது ஆன்லைன்னில் உங்களுடைய தகவலை வெளியிடும் முன் சற்று ஜாக்கிரதையாக செயலாற்றவும் என்ற கருத்துடனே கதை முடிகிறது. ஆனால், அதற்கு இனி சாத்தியம் இல்லை என்பது போல பலபேரின் வர்த்தகம் ஆன்லைன்னிலே தான் இருக்கிறது என்பது போலக் காட்டி படத்தை முடித்திருப்பார்கள்.

வேண்டியதை அருளும் முருகனின் 21 நாள் விரதம்!

பட்டாசு வரலாற்று தகவல்கள்!

மாதந்தோறும் EMI தொகையை அதிகப்படுத்துவது நன்மை தருமா?

திருமண பந்தத்தின் உன்னதம் உணர்த்திய புகழ் பெற்ற சினிமா இயக்குநர் மனைவி!

2030ல் இந்தியாவே மாறப்போகுது… டேட்டா பயன்பாடு பன்மடங்கு உயரும்! 

SCROLL FOR NEXT