venkatprabhu vijay
venkatprabhu vijay 
வெள்ளித்திரை

தளபதி 68 படப்பிடிப்பின் போட்டோ.. ரசிகர்கள் உற்சாகம்!

விஜி

ளபதி 68 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதனையடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

இதன் படப்பிடிப்பு 'லியோ' ரிலீசுக்கு பின்பாக துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் ஷுட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. படத்தின் முக்கியமான ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் தாய்லாந்த் ஷெட்யூலை நிறைவு செய்து விட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தில் நடிக்கும் நடிகை லைலா, நடிகர் பிரசாந்துடன்  படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் ஒன்றாக எடுத்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

வீட்டுக்கு அழகு சேர்க்கும் போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு!

பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா? 

நிலக்கடலை சேவு மற்றும் சேமியா அடை செய்யலாம் வாங்க!

டை அடிக்கும் போது இதெல்லாம் செய்யாதீங்க ப்ளீஸ்!

முடிவை எடுக்கும் முன் முயற்சிகள் முக்கியம்! அதிகரிக்கும் விவாகரத்துகள்!

SCROLL FOR NEXT