வெள்ளித்திரை

லியோ முதல் சித்தா வரை.. இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் 5 படங்கள் இவைதான்!

விஜி

வ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் படத்தின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

என்னதான் தியேட்டர்கள் இருந்தாலும் கொரோனாவுக்கு பிறகு ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மையத்திற்கு மாற, அனைவரும் வீட்டில் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் படம் பார்த்தாலும் கூட ஓடிடி ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

அப்படி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இந்த வாரம் அமைந்துள்ளது. ஏனென்றால் ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பான லியோ திரைப்படம் இந்த வாரம் தான் வெளியாகிறது. தொடர்ந்து எந்த படம் என்று எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை பார்கக்லாம்.

லியோ:

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான லியோ படம் இந்தியாவில் வரும் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. உலகம் முழுவதும் நவம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது.

சத்திய சோதனை:

சத்திய சோதனை

பிரேம்ஜி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் 'சத்திய சோதனை' வரும் வெள்ளிக்கிழமை சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஸ்டீரிம் ஆக இருக்கிறது.

டீமன்:

டீமன்

'டீமன்' படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை மறுதினம் வெளியாகிறது. த்ரில்லர் கதை அம்சம் கொண்ட இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.

தி வில்லேஜ்:

தி வில்லேஜ்

ஆர்யா நடிப்பில் திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் 'தி வில்லேஜ் நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.

சித்தா:

Chithha movie

பலரும் எதிர்பார்த்த படங்களில் சித்தாவும் ஒன்று. சித்தார்த்த், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'சித்தா' படம் வரும் 28ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT