வெள்ளித்திரை

விருதுகள் குவிக்கும்  ‘இரவின் நிழல்’! 

கல்கி

-லதானந்த்

இயக்குனர் பார்த்திபன் தனது முதல் படமான 'புதியபாதை'யில் ஆரம்பித்து, கடைசியாக வெளியான  'ஒத்த செருப்பு'  வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி, இயக்கித் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி அதில் வெற்றிகரமாகப் பயணித்துவருகிறார். 

ஒத்த செருப்பு 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது உட்படப்  பல உலக விருதுகளைப் பெற்றது. தனது முந்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கிச் சென்ற பார்த்திபன், தற்போது உலக சினிமாவைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான 'இரவின் நிழல்' படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்து, உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.

அதில் மூன்று சர்வதேச விழாக்களில்  'இரவின் நிழல்' வெற்றிபெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் ஆர்தர் A .வில்சனுக்கு  இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்துக்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வ தேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது. 

சர்வதேச விருதுகள் கிடைத்ததில் பார்த்திபனுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஜூலை 15 வெளிவர இருக்கும் இரவின் நிழலுக்குத் திரையரங்கிற்கு  ரசிகர்கள் வந்து கைதட்டல்  மற்றும் விசிலுடன் தரப் போகும் பெரு வெற்றியே தனக்கான பெரிய விருது எனக் காத்திருக்கிறார்.

இரவில் ஒளிரும் அதிசயத் தாவரங்கள்!

Brazilian Treehopper: மண்டை மேல கொண்டை வச்சிருக்கானே எவன்டா இவன்? 

ஏர்ல் கிரேய் டீயிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

எமனை உயிர்ப்பிக்க பூமாதேவி வழிபட்ட தலம் எது தெரியுமா?

Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

SCROLL FOR NEXT