வெள்ளித்திரை

பிரபாஸூக்கு பொண்ணு பார்த்தாச்சு: தாய்மாமன் தகவல்!

கல்கி

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகரானார் பிரபாஸ். எலிஜிபிள் பேச்சுலரான அவரது திருமணம் குறித்த வதந்திகள் பல வருடங்களாக பரவி வந்த நிலையில், நடிகர் பிரபாஸுக்கு பெண் பார்த்துவிட்டதாக அவரது பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி உள்ள தகவலால் பிரபாஸின் ரசிகர்கள் குஷியாகி, அந்த அதிர்ஷ்டக்கார பெண் யார் என கேட்டு வருகின்றனர்.

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் பிரபாஸ். நடிகர் பிரபாஸிற்கு தற்போது 42வயதாகிறது. பாகுபலி படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  

பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கெமிஸ்டிரி செமத்தியாக  ஒர்க் அவுட்டாகி இருந்தது. அந்த நேரத்தில் இவர்கள் இருவரின் பெயரும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்து மீடியாவில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரபாஸ், காதல் பற்றிய என் கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருக்கிறது. அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறினார். 

இந்நிலையில், பிரபாஸின் தாய்மாமனான கிருஷ்ணம் ராஜு அண்மையில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பிரபாஸுக்கு பெண் பார்த்துவிட்டதாகவும், இந்த வருடம் திருமணம் நிச்சயமாக நடக்கும் என்றும், திருமணம் தேதி குறித்த தெளிவான அறிவிப்பை விரைவில் குடும்பத்தினர் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபாஸுக்கு பார்த்துள்ள பெண் யாராக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் பெருத்த சஸ்பென்ஸில் உள்ளனர். நடிகர் பிரபாஸ் தற்போது, சலார், ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT