Vanangaan Movie update 
வெள்ளித்திரை

ரசிகர்கள் எதிர்பார்த்த 'வணங்கான்' பட அப்டேட் கொடுத்த பாலா!

விஜி

முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் பாலாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பாலா கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் வெளியாகவில்லை.

அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா, தங்களுக்கு திருப்தியில்லை என வர்மாவை தயாரித்தவர்கள் படத்தை முற்றாக நிராகரித்தனர். பிறகு ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து இயக்கி வெளியிட்டனர்.

இதனால் இந்த படம் பாலாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வர வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் தொடங்கினார். ஒரு ஷெட்யூல்ட் முடிந்த நிலையில், இந்த படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாலா, “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து, வணங்கானில் அருண் விஜய் ஒப்பந்தமானார். ஒரு கையில் பெரியார் சிலையும், மறுகையில் விநாயகர் சிலையுமாக அருண் விஜய் இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன் பிறகு படம் குறித்த எந்தத் தகவலும் இல்லாமலிருந்தது.

அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையின் போது மிஷன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பல விபத்தை தாண்டி இந்த படம் அருண் விஜய்க்கு ஒரு ஹிட்டாக இருந்தது. தற்போது இவரின் வணங்கான் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், வணங்கானின் டீசர் வரும் 19 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். வணங்கானில் மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது.

பாலாவின் கம்பேக் திரைப்படமாக வணங்கான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர். வணங்கானின் டீசர் வெளியீட்டு அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT