வெள்ளித்திரை

ஓடிடியில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த வெற்றி மாறனின் “விடுதலை பாகம் 1"

கல்கி டெஸ்க்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும், விஐய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இதில் பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் கூட முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவருடைய "வழி நெடுக காட்டுமல்லி" பாடல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு வேல்ராஜ். ஆர்எஸ் இன்ஃபோடெய்ண் மெண்ட் தயாரிப்பில், படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர் வெற்றிமாறன். அவரது ஒவ்வொரு படமும் தரமான படமாக இருக்கும். இதனால் அவரது படங்களுக்கு மிகவும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது விடுதலை படம்.

இதில் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில்பட்டையை கிளப்பி வருகிறது . திரையரங்கம் மட்டுமின்றி ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் முதல் பாகம் மார்ச் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. இதன் பிறகு ஏப்ரல் 28-ம் தேதி ‘Director Uncut Version’ என படத்தின் முழு பகுதியும் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

அதற்க்கு காரணம் திரையரங்கில் நாம் பார்த்திராத காட்சிகளை ஓடிடியில் எஸ்ட்டெண்டெட் வெர்ஷன் டைரக்டர் கட் என வெளியிட்டனர்.

இந்நிலையில், மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படம் உலகளவில் மொத்தம் ரூ. 60 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

படம் ஓடிடி தளத்தில் வெளியாகி புதிய சாதனையையும் படைத்திருக்கிறது ‘விடுதலை’. படம் வெளியாகி 25 நாட்களை கடந்திருக்கும் நிலையில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது ’விடுதலை’. முதல் பாகமே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது பாகத்தை ரசிகர்கள்ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT