வெள்ளித்திரை

மோதிக்கொள்ளும் விஜய் - ரஜினி ரசிகர்கள்.. மதுரையில் போஸ்டர் கலவரம்!

விஜி

டுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி நீண்ட காலமாக தமிழ் சினிமாவை தொற்றிக் கொண்டுள்ள நிலையில், தங்கள் தலைவருக்கு எண்டே இல்லை என ரஜினி ரசிகர்களும், தளபதி தான் உச்ச நட்சத்திரம் என விஜய் ரசிகர்ளும் போஸ்டர் மோதலில் குதித்து உள்ளனர்.

தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் நடிகர் விஜய், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், இரவு பாட சாலை, இலவச சட்ட உதவி மையம் என தனது பணிகளை விரிவுப்படுத்திக் கொண்டே செல்கிறார்.

இதனிடையே வாரிசு பட விழாவில் சரத்குமார் பேசிய பேச்சு புதிய யுத்தத்தை தொடங்கி வைத்தது. விஜய்தான் Future Superstar என கூற, ரஜினி ரசிகர்கள் எதிர்வினையாற்ற தொடங்கினர்.இதற்கு உச்சமாக அமைந்தது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில், ரஜினி கூறிய குட்டி கதை இதுதான்.

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

"காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக் கொண்டே இருக்கும். ஆனால், கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும் பொழுது கழுகைப் பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால், கழுகு தன் இறக்கையை கூட ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும்"

இந்த கதையை விஜய்க்காகத்தான் ரஜினி கூறியதாக இணையத்தில் அடித்துக் கொண்டனர் ரஜினி-விஜய் ரசிகர்கள். அது தற்போது மதுரையில் போஸ்டர் யுத்தமாக வடிவெடுத்துள்ளது. "என்னுடைய உச்சம் ... உனக்கு ஏன் அச்சம் ? என்ற வாசகத்தோடு  ரஜினி மற்றும் விஜய் படங்களை அச்சிட்டு விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

RAJINI FANS POSTER AGAINST VIJAY

இதற்கு பதிலடியாக ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் தட்டி பறிக்க தெரியாது. விட்டு கொடுக்க முடியாது... உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.அரசியலுக்கு வருவேன் என அறிவித்த ரஜினி, உடல் நிலை காரணமாக பின்வாங்கி விட்டார். அதேநேரத்தில் அரசியல் களத்திற்கு வர விரும்புகிறார் விஜய். இவ்விரு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது, தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி, அரசியல் களத்திற்கும் பைசா வசூல் கண்டென்டாக மாறி உள்ளது.

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

கென்யாவில் 'தேனீ வேலி' - யானைகளையும் மனிதர்களையும் காக்கும் நல்முயற்சி!

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

SCROLL FOR NEXT