அரசியலுக்கு வந்த விஜய் குறித்து சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ராதாரவி கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கினார். அதன்பின்னர் கட்சியினர் கட்சியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமா துறையை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன. இந்தக் கட்சியின் முதல் மாநாடு நாளை 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது.
மாநாடு நடக்கும் இடத்தில் பெரிய பெரிய பேனர்கள், கட்டவுட்கள் எல்லாம் வைக்கப்பட்டன. பெரிய கொடிக்கம்பம் முதல் அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதைவிடவும் மிகவும் ஒரு அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால எப்போதும் அமைதி காக்கும் விஜய், மாநாட்டில் தானும் ஒரு அரசியல்வாதி என்பதை நிரூபித்தார். அதாவது வெறித்தனமாக பேசி அனைத்துக் கட்சிக்காரர்களையும், மக்களையும் ஆச்சர்யப்பட வைத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து பலரும் இதற்கு கருத்துகள் தெரிவித்தனர். சிலர் விஜய்க்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துக்களைப் பகிர்ந்தனர். இதனையடுத்து விஜய் சினிமாவில் உடன் நடிப்பவர்களுடன்கூட அவ்வளவாக பேசமாட்டார் , மதிக்கமாட்டார், இவர் எவ்வாறு அரசியலில் வெற்றிக் காண்பார் என்று சிலர் பேசினர்.
இதுகுறித்து ராதாரவி பேசுகையில், “என் பேரன் விஜயின் தீவிர ரசிகர். அவர் விஜயை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆசைக்கொண்டார். ஆகையால், ஒருநாள் குடும்பத்துடன் அழைத்துச் சென்றேன். புகைப்படங்களும் எடுத்துக்கொண்டோம். இது ஒரு 8 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இதனையடுத்து சர்க்கார் படத்தில் அவருடன் சேர்ந்து நான் நடித்தேன். அதற்கு அவரிடம் நேரில் வாழ்த்துக் கூறலாம் என்று தொலைப்பேசியில் அனுமதி கேட்டேன். அப்போது அவர் உதவியாளர் , வாங்க, ஆனா அன்று போல் கூட்டத்த கூட்டிட்டு வந்துடாதீங்க என்று சட்டென்று முகத்தில் அடித்தமாதிரி கூறிவிட்டார்.” என்று ராதாரவி பேசினார்.
மேலும் அதிலிருந்து விஜயை சந்திக்கவோ அல்லது அவரது வீட்டிற்கு சென்றதோ இல்லை என்று பேசினார்.
இதுதான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.