வெள்ளித்திரை

யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் "மெடிக்கல் மிராக்கல்"

Jessica

ஏ1 புரோடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஜான்சன்.கே தயாரித்து இயக்க, யோகிபாபு நாயகனாக நடிக்கும் படம் "மெடிக்கல் மிராக்கல்"

திரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். காமெடி படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்ல, அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்த, அனைவராலும் கொண்டாடப்பட்ட, காமெடி படங்களான "ஏ1, பாரீஸ் ஜெயராஜ்", படங்களை தந்த இயக்குநர் ஜான்சன்.கே, தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். இந்த புதிய திரைப்படத்திற்கு "மெடிக்கல் மிராக்கல்" என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தை எழுதி இயக்குவதோடு, ஏ1 புரோடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் இயக்குநர் ஜான்சன்.கே.

இப்படத்தில் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஓலா டிரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழுவினராக
இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் – தமிழ்குமரன், கலை இயக்கம் – ராஜா A, பாடல்கள் – ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் V, தயாரிப்பு மேற்பார்வை – கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள "மெடிக்கல் மிராக்கல்" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT