தசரா முடிந்த 21ம் நாள் தீபாவளி பண்டிகை வருகிறது. லூனார் கேலண்டர்படி ஒன்றிரண்டு நாட்கள் வேறுபட்டாலும், பெரும்பாலும் 21ம் நாள்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியிலுள்ள சுவாரசியமான தகவல் தெரியுமா உங்களுக்கு?
ஸ்ரீராமர், ராவணனுடன் யுத்தம் புரிந்து வெற்றியடைந்த தினம் தசரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பிறகு இலங்கையிலிருந்து அயோத்தி நோக்கித் தனது படைகளுடன் ஸ்ரீராமர் நடந்து வருவதற்கு 504 மணி நேரங்கள் ஆயின. நாள் ஒன்றுக்கு 24 மணி நேரக்கணக்கின்படி, 504ஐ 24ஆல் வகுக்கக் கிடைப்பது 21 நாட்கள்.
இலங்கை - அயோத்தி இரண்டிற்கும் இடையேயுள்ள 3145 கிலோ மீட்டர் தொலைவினை 504 மணி நேரங்களில் நடைப்பயணமாக வந்தது போற்றுவதற்குரிய செயலாகும்.
ஸ்ரீராமர் அயோத்திக்கு வருகையில் மக்கள் தீப விளக்குகளை ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடினர்.
அஞ்ஞான இருள் அகற்றி மெய்ஞானம் பெறுவது என்பதே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவமாகும். மேலும், தீபாவளி ஏழை - பணக்காரன் பாகுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது என்பது விசேஷமாகும்.