Hot Water Wells 
கலை / கலாச்சாரம்

சுடு நீர் கிணறுகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

ரா.வ.பாலகிருஷ்ணன்

கிணறு என்றாலே குளிர்ச்சியான நீர் தான் இருக்கும் என்பது பலருடைய எண்ணம். இதில் எவருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் சூடான தண்ணீரைக் கொண்ட கிணறுகளும் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், இந்த சுடு நீர் கிணறுகள் எங்கு இருக்கின்றன; அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

கிணறுகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவை கிராமங்கள் தான். சிறுவர்களும், இளைஞர்களும் கிணறுகளில் குளிப்பதை பொழுதுபோக்காகவே வைத்திருந்தனர். குளங்களை விட கிணறுகளில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ள முடியும் என அனுபவசாலிகள் நிறைய பேர் சொல்லிக் கேள்விப் பட்டிருப்போம் அல்லவா! அதற்கேற்ப பலரும் நீச்சல் கற்றுக் கொள்ள உதவியாக இருந்தவையும் கிணறுகள் தான். கிணற்றில் இருக்கும் குளிர்ச்சியான நீர், உடல் சூட்டையும் போக்குகிறது. அதைவிட முக்கியம் யாதெனில், கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்தால், மனதளவில் மகிழ்ச்சியையும் நீங்கா நினைவையும் தருகின்றன.

கோடை காலம் வந்து விட்டால் போதும், பள்ளி நண்பர்கள் கூட்டாக சேர்ந்து தினமும் கிணற்றில் குளிப்பதை வாடிக்கையாகவே வைத்துக் கொள்வார்கள். இப்படி இருக்கையில் யார் தான் கிணற்றில் குளிக்கும் அருமையான தருணத்தைத் தவற விடுவார்கள். கிணற்றில் குளிப்பது குளிர்ச்சியாக இருக்கும்; விவசாயத்திற்கு உதவும் என்பதையும் தாண்டி ஒருசில கிணறுகளில் குளிப்பது புண்ணியம் என்றும் சொல்லப்படுகின்றன. கிணற்றில் குளித்தால் புண்ணியமா? அப்படி அந்தக் கிணறு எங்கு இருக்கிறது எனக் கேட்கிறீர்களா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பஜ்றாதேவி அம்மன் கோயிலில் தான் சுடு நீர் கிணறுகள் உள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 9 சுடு நீர் கிணறுகள் இக்கோயிலில் இருக்கின்றன. கிணறுகள் பொதுவாக வட்ட வடிவில் தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள சுடு நீர் கிணறுகள் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பாக கருதப்படுகின்றன. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதமான சுடு நீர் கிணற்றில் குளித்து விட்டு, அம்மனை தரிசனம் செய்கின்றனர். சாமியார்கள் சிலரும் இங்கு வந்து, கிணற்றில் இறங்கி தியானம் செய்கின்றனர்.

இக்கோயிலுக்கு அருகில் பல கிணறுகள் இருந்தாலும், அவற்றில் இருக்கும் தண்ணீர் குளிர்ச்சியாகத் தான் இருக்கின்றன. இருப்பினும், அம்மன் கோயிலில் மட்டும் சுடு நீர் கிணறுகள் இருப்பது, எண்ணற்ற பக்தர்களை இங்கு வரவழைக்கத் தூண்டுகின்றன. சாதாரணமாக ஒரு சுடு நீர் கிணறு இருந்தாலே அது ஆச்சரியம் தான். ஆனால், இங்கு 9 சுடு நீர் கிணறுகள் இருப்பது பக்தர்களுக்கு ஆச்சரியத்தையும் தாண்டி, கோயிலின் மகிமையையும் எடுத்துரைக்கின்றன.

சுடு நீர் கிணறுகள் கிணறுகள் மிகவும் புண்ணியமானவை என்றும், இதில் பக்தர்கள் குளிப்பதால் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றும் இங்கு வாழும் மக்களும் பரவலாகச் சொல்லப்படுகின்றன. கிணறுகள் பரவலாக அழிந்து வரும் இன்றைய நிலையில், சுடு நீர் கிணறுகளில் நாம் எப்போது குளிக்கப் போகிறோம் என்ற ஏக்கமும் நிச்சயமாக நமக்குள் ஏற்பட்டு விடுகின்றன.

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT