கைவினைக் கலை விழா 
கலை / கலாச்சாரம்

ஆரெம்கேவி சில்க்ஸின் கைவினைக் கலை விழா!

கல்கி டெஸ்க்

ந்தியாவின் சிறப்புமிக்க கைத்தறி பாரம்பரியத்தை போற்றும் விதமாய்  நேர்த்தியான கைவினைத்திறன், புதுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பெருமைகளோடு, இந்திய கைத்தறி பட்டு தொழிலில் முன்னனி நிறுவனமாக திகழும் ஆரெம்கேவி சில்க்ஸ், திருநெல்வேலியில் உள்ள அதன் முதன்மை கிளையில் கைத்தறி தின நிகழ்வுடன், அதன் 100வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

திருநெல்வேலி, வண்ணார்பேட்டை ஆரெம்கேவி சில்க்ஸ் கடையில் தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில்  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

மாரு மேக்வால் சமூகத்தின் சிறப்பான சூஃப் மற்றும் காரிக் எம்பிராய்டரி, கட்ச்சில் இருந்து பாரம்பரிய பேட்ஜ் மற்றும் அப்ளிக் எம்பிராய்டரி, ராஜஸ்தானின் பழங்கால பாட் ஓவியம் ஆகியவற்றோடு தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைப் பொருட்களும், நாகாலாந்தின் பேக்ஸ்ட்ராப் நெசவு, அஸ்ஸாமில் உள்ள மஜூலியில் இருந்து பாரம்பரிய முகக்கவசம் தயாரிப்பு மற்றும் பட்டு நெசவு, மேற்கு வங்காளத்தின் காந்தா எம்பிராய்டரி, ஒடிசாவில் இருந்து இக்கத், உத்தர கன்னட மாவட்டத்தில் இருந்து ஹசே சித்தாரா மற்றும் திருநெல்வேலியில் இருந்து பத்தமடை பாய் ஆகிய கலைப் படைப்புகளோடு, பங்கேற்பாளர்களாக கைத்தறி மற்றும் கைவினைக் கலைஞர்களும் கலந்து கொள்ளும் இந்த பெருவிழாவில் இந்தியாவின் காஷ்மீரி கைவினைஞர்களின் நேர்த்தியான கைவினைத்திறனையும், அழகான காஷ்மீரி சால்வைகள் மற்றும் ஆரி எம்பிராய்டரி ஆடை வகைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற வளமான கலாசார மற்றும் பாரம்பரிய கலை நுட்பங்களைப் போற்றும் விதமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் இங்க காட்சிபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரெம்கே.விஸ்வநாத பிள்ளையால் 1924ல் துவங்கப்பட்ட ஆரெம்கேவி சில்க்ஸ் தரமான திருமணப் பட்டுகள், தனித்துவமான பட்டுப் புடைவைகள் மற்றும் குடும்ப ஆடைகள், பாரம்பரிய நெசவு நுட்பங்களைக் கண்டறிந்து ஆதரவு அளித்தல்  புதுமையான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கைவினைஞர்களுடன் இணைந்து காப்புரிமை பெற்ற கைத்தறி நுட்பங்களை உருவாக்கி இந்திய கைத்தறி பாரம்பரியத்தின் கலைத்திறனைத் கொண்டாடும் சிறப்புமிக்க பணியைச் செய்து வருகிறது

ஆரெம்கேவி சில்க்ஸ் தனது அடுத்த நூற்றாண்டை துவங்கும் இந்த மகிழ்வான தருணத்தில் பாரம்பரிய கைவினைத்திறனை ஊக்குவிப்பதிலும், நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஆதரிப்பதிலும் உறுதியுடன் உள்ளது. தரம், நம்பகத்தன்மை ஆகியவற்றின் நீண்ட கால அர்ப்பணிப்பிற்கு சான்றாக விளங்குகிறது ஆரெம்கேவி சில்க். இந்தக் கைத்தறிக் கண்காட்சி, இந்திய கைத்தறியின் உன்னதமிக்க மரபு வழி பெருமையை போற்றிப் பாதுகாக்கும் வகையில் நடைபெற உள்ளது.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT