R K Narayan 
கலை / கலாச்சாரம்

ஆர்.கே.நாராயணனின் புதினங்களில் வரும் 'மால்குடி' எனும் ஊர் எங்கே இருக்கிறது?

தேனி மு.சுப்பிரமணி

ஆர்.கே.நாராயணின் புதினங்கள், சிறுகதைகள் போன்றவற்றில் இடம் பெற்ற மால்குடி (Malgudi) எனும் ஊர், அவரது வாசகர்களிடையே அறியப்பட்ட மிகவும் புகழ் பெற்ற ஊராகும். இந்த ஊர் உண்மையில் இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை.

இந்த ஊர் ஒரு கற்பனை ஊர். கருநாடகத்தின், ஆகும்பே எனுமிடத்தில் அமைந்துள்ளதாக சித்தரிக்கப்படும் இந்தக் கற்பனையான ஊர், நாராயணின் பெரும்பாலான படைப்புகளில் கதை நடக்கும் இடமாக அமைந்திருக்கிறது. இந்தக் கற்பனை ஊரானது, அவரது முதல் புதினமான ‘சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்’ தொடங்கி, அவருடைய பதினான்கு புதினங்களில் இடம் பெற்றிருக்கிறது. அவரது பெரும்பாலான சிறுகதைகளுக்கும் மால்குடி எனும் கற்பனை ஊர் களமாக அமைந்துள்ளது.

தனது கற்பனை ஊரான மால்குடியை இந்தியாவின் நுண்ணிய ஒரு வடிவமாக நாராயணன் சித்தரித்துள்ளார். மால்குடி டேசில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 19 ஆம் நூற்றாண்டில் ஒரு கற்பனையான பிரித்தானிய அதிகாரியான சர் ஃபிரட்ரிக் லாலே ஒரு சில கிராமங்களை ஒன்றிணைத்து வளர்த்து அதன் மூலம் மால்குடி உருவாக்கப்பட்ட்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர் ஃபிரெட்ரிக் லாலியின் பாத்திரமானது 1905 ஆம் ஆண்டில் மதராஸ் கவர்னராக இருந்த ஆர்தர் லாலியை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கற்பனை ஊரான மால்குடி, மைசூர் மற்றும் மதராஸ் மாநிலங்களின் எல்லையிலும், மதராசிலிருந்து சில மணி நேரப் பயண நேரத்திலும் சென்றடையக் கூடியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கற்பனை ஊர், கற்பனையான மெம்பி காடுகளுக்கு அருகிலும், கற்பனையான சரயூ ஆற்றங்கரையிலும் அமைந்துள்ளது. மெம்பி காடுகள், பல குன்றுகளையும் குகைகளையும் கொண்டுள்ளது. அக்காடுகளில் புலி, மான், லாங்கர் குரங்கு, எருமை போன்றவை உலா வருகின்றன. 

மால்குடியில் சரயூ ஆறு முக்கிய இடம் பிடித்திருக்கிறது. நாராயணனின் சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்ஸ் புதினத்தில், சுவாமி, மணி, ராஜம் ஆகியோர் தங்கள் மாலை நேரங்களை சரயூ ஆற்றங்கரையில் விளையாடியோ, அரட்டையடித்தோப் பொழுதைச் செலவிடுகிறார்கள். தி கைடு புதினத்தில், சாதுவான ராஜு, வறண்டு போயுள்ள சரயுவின் கரையில், மழை வேண்டி உண்ணா நோன்பு இருக்கிறார். மகாத்மா காந்தி மால்குடிக்கு வரும் போது, சரயூ ஆற்றங்கரையில் கூட்டங்களும் பேச்சுகளும் நடைபெறுவதாகச் சித்தரிக்கபட்டுள்ளது.

மால்குடி ஊர் ஒரு பனைக்கதை படைப்பு என்று நாராயணன் குறிப்பிட்டாலும், இந்த ஊரின் ஒரு புறம் சரயூ ஆறும், மறு புறம் மெம்பி காடும் இருப்பது இந்த ஊர் வளமான பகுதியாகக் காட்டப்படுகிறது. இந்த ஊரிலிருக்கும் லாலி சாலை, வெரைட்டி ஹால், பாம்பே ஆனந்த பவன் உணவு விடுதி போன்றவை, வாசகர்களை மைசூர்தான் மால்குடி என்று யூகிக்க வைக்கின்றது. 

மால்குடியின் மையத் தெருவாக, கடை வீதி இருக்கிறது. இங்கு பாம்பே ஆனந்த் பவன் மற்றும் ட்ரூத் பிரிண்டிங் ஒர்க்ஸ் உள்ளிட்ட பல பெரிய கடைகள் அமைந்துள்ளன. கபீர் தெரு மால்குடியின் உயரடுக்கு மக்களின் வசிப்பிடமாக இருக்கிறது. அதே வேளையில் லாலி விரிவாக்கம் என்பது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் வசிக்கும் புதிய பகுதியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. குரோவ் தெரு, காளிகாட் லேன் மற்றும் விநாயக் முதலி தெரு போன்றவைகளும் மால்குடியில் இருக்கின்றன. எண்ணெய் வியாபாரிகளின் இருப்பிடமான எல்லம்மன் தெரு, கடைசித் தெரு, அதைத் தாண்டி சரயு ஆறு உள்ளது. எல்லம்மன் தெருவிற்கும், ஆற்றுக்கும் இடையில் நல்லப்பாவின் தோப்பும் தகனக் கூடமும் உள்ளன. தாழ்த்தப்பட்டவர்களும், துப்புரவுப் பணியாளர்களும் ஆற்றின் கீழ் கரையில் வசிக்கின்றனர்.

பழைய வெரைட்டி ஹாலுக்குப் பதிலாக 1935 ஆம் ஆண்டில் பேலஸ் டாக்கீஸ் கட்டப்பட்டது. ஆல்பர்ட் மிஷன் பள்ளி மற்றும் ஆல்பர்ட் மிஷன் கல்லூரி ஆகியவை மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்கள். வாரியப் பள்ளி மற்றும் நகரத் தொடக்கப் பள்ளிகளும் இருக்கின்றன. மால்குடியில் ஒரு சிறிய தொடருந்து நிலையம் உள்ளது. இது பல அத்தியாயங்களில் கதையின் மையமாக உள்ளது. மால்குடியின் முக்கிய மருத்துவமனை மால்குடி மருத்துவ மையம். இது எம்எம்சி என்று குறிப்பிடப்படுகிறது. குதிரை மீது அமர்ந்திருக்கும் சர் ஃபிரெட்ரிக்கின் சிலை மற்றொரு முக்கிய அடையாளமாக அமைகிறது. மற்றொரு முக்கியமான இடம் தி போர்டுலெஸ், பெயர் பலகை ஏதும் இல்லாத சிறிய உணவகம். போர்டுலெஸ் மால்குடியின் தற்போதைய நிகழ்வுகள் குறித்த விவாத மையமாக உள்ளது.

1986 ஆம் ஆண்டில் கன்னட நடிகரும் இயக்குனருமான சங்கர் நாக் இயக்கிய, இந்தியத் தொலைக்காட்சித் தொடரான மால்குடி டேஸ், ஆர். கே. நாராயணின் பெயரிடப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இது பெரும்பாலும் கர்நாடகத்தின் சிமோகா மாவட்டத்திலிருக்கும் ஆகும்பே அருகே படமாக்கப்பட்டது.

பொதுவாக, மால்குடி எனும் கற்பனை ஊர், 'தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம்' என்ற கருத்து பரவலாக, பலரது கற்பனையிலும் வேரூன்றியுள்ளது. தென்னிந்திய பாணியிலான உணவகங்கள், மால்குடி என்ற பெயரிலோ அதை ஒத்ததாகவோ இன்றும் பல இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT