korean girls outfit dress... Image credit - pixabay.com
அழகு / ஃபேஷன்

கொரியப் பெண்களின் 5 ட்ரெண்டிங் அவுட் ஃபிட் வகைகள்!

எஸ்.விஜயலட்சுமி

கொரியப் பெண்கள் அழகுப் பதுமைகளாக மட்டும் காட்சி அளிப்பது இல்லை. ஆடை அலங்காரம் செய்வதிலும் வல்லவர்கள். அவர்களுக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் உண்டு. பொதுவாக கொரியன் ஃபேஷன் ஆடைகள் பழமையும், புதுமையும் கலந்த நவீன டிசைனில் அமைந்திருக்கும். இந்த பதிவில் கொரிய பெண்களின் 5 வகையான ட்ரெண்டிங் ஆடைகளை பற்றி பார்ப்போம்.

1. டிரெஞ்ச் கோட்; (Trench coat)

இந்த வகையான கோட் பொதுவாக வாட்டர் ப்ரூப் மெட்டீரியல்களில் இருந்து தயாராகிறது. ஈரத்தை உறிஞ்சும் தன்மையுடன் இருக்கும் காட்டன், பாலியஸ்டர், நைலான் போன்ற துணி வகைகளில் தயாரிக்கப் படுகிறது. குளிர், மழைக் காலங்களில் அணிய ஏற்றது. இது முழங்கால் வரை நீண்டிருக்கும். சில கோட்டுகளில் பெல்ட் இணைக்கப்பட்டிருக்கும். இதில் உயரமான காலர் இருக்கும். சிலவற்றில் தலைக்குப் போடும் கூடியுடன்  இணைக்கப்பட்டிருக்கும். இந்த கோட்டின் உள்புறம் லைட் வெயிட் லைனிங் இருக்கும். அது அணிந்து கொள்வதற்கு சௌகரியமாக இருக்கும். தேவையில்லாத சமயங்களில் அதை நீக்கிவிட்டு கூட அணிந்து கொள்ளலாம்.

டிரெஞ்ச் கோட்...

2. மிடி ஸ்கர்ட்;

இதன் நீளம் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இருக்கும். எலாஸ்டிக் வைத்த இடுப்பு பகுதியில் ஜிப் அல்லது பட்டன்கள் வைத்திருக்கும். காட்டன், சில்க், டெனிம், பாலிஸ்டர் போன்ற மெட்டீரியல்களில் தயாராகும் இது பலவித டிசைன்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ப்ளீட்ஸ் வைத்தது, சுருக்கங்கள் நிறைந்தது, ஸ்ட்ரெய்ட் டிசைன் என்று இருக்கும். 

வைட் லெக் ஜீன்ஸ்...

3. வைட் லெக் ஜீன்ஸ்:

இதில் இடுப்பு முதல் கணுக்கால் வரை தளர்வாகவும் அகலமாகவும் இருக்கும். பொதுவாக டெனிம் மெட்டீரியல்களில் தயாராகிறது. இதில் 5 பாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். முன்புறம் 2 பாக்கெட்கள், இரண்டு பின் பாக்கெட் மற்றும் ஒரு சிறிய பாக்கெட் இருக்கும்.

4. காலர்ட் பிளவுஸ் (காலர் வைத்த சட்டை)

காலர் வைத்த சட்டையில் பட்டன்கள் பொருத்தப் பட்டிருக்கும். இது ஃபிட்டாக அல்லது லூசான சைஸ்களில் கிடைக்கும். டக் இன் செய்து அணிந்து கொள்ளலாம். நீளமான, குட்டையான அல்லது த்ரீ ஃபோர்த் ஸ்லீவ்களுடன் கிடைக்கும். முடிவில் கஃப்ஸ் வைத்தும் கிடைக்கும். இது பெரும்பாலும் காட்டன், சில்க், பாலிஸ்டர் போன்ற இலகுவான மெட்டீரியல்களில் இருந்து தயாராகிறது. இந்த காலர்ட் பிளவுஸ் சட்டையை அவர்கள் பலவிதமான ஆடைகளுக்கு மேட்சிங் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். மினி ஸ்கர்ட்டுகள், நீளமான கால்களை உடைய ஜீன்ஸ், கேசுவல் ஸ்வெட்டர்களுடன் சேர்த்து அணிந்து கொள்ளலாம்.

5. ஃப்ளோரல் நேவி அவுட் ஃபிட் (Floral Navy outfit)  

ஃப்ளோரல் நேவி அவுட் ஃபிட் என்பது நவீனமும் பழமையும்  கலந்த கலவையாக அமைந்திருக்கும். இது பொதுவாக நேவி ப்ளூ கலரில் பூக்கள் போடப்பட்ட டிசைனில் தயாரிக்கப்படும் ஒரு உடை. காண்ட்ராஸ்டிங் கலரில் பூக்கள் போடப்பட்ட டிசைனில் டாப் அமைந்திருக்கும். டாப் பகுதியில் உயர்ந்த காலர் அமைக்கப்பட்டிருக்கும். பஃப் ஸ்லீவ்களும் இருக்கும். இதனுடன் ஹை வெயிஸ்ட் ஸ்கர்ட், வைட் லெங்க்த் பேண்ட் அல்லது ஷார்ட்ஸ் அணியலாம். இவை டாப்புக்கு ஏற்ற வகையில் பொருத்தமாக அமைந்திருக்கும்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT