Inverted triangle shape: தோள்பட்டை பெருசாகவும் இடுப்பு சிறிதாகவும் உள்ளவர்கள் ஸ்லிம் பிட் போன்ற சட்டை அணிந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
Oval Shape: தோள்பட்டை மற்றும் இடுப்பு ஒரே அளவில் உள்ளவர்கள். கம்பெர்ட் பிட் சட்டை அணிந்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
Triangle Shape: தோள்பட்டை சிறிதாகவும் இடுப்பு பேரிதாகவும் உள்ளவர்கள். ரொம்ப ஈஸியாக சொல்லவேண்டும் என்றால் தொப்பை உள்ளவர்கள். ரெகுலர் பிட் போன்ற சட்டை அணிந்தால் பார்ப்பதற்கு தொப்பை அவ்வளவாக வெளியே தெரியாது.
தொப்பை உள்ளவர்கள் காட்டன் சட்டைகளை அணிவதால் தொப்பை எளிதில் மற்றவர்களுக்கு தெரியாது. டார்க் கலர் சட்டைகளை அணியும் பொழுது தொப்பை தெரியாது.
ஏனெனில் தொப்பை உள்ளவர்கள் டார்க் கலர் சட்டை அணியும் பொழுது பார்ப்பவர்களின் பார்வை உங்கள் தொப்பைக்கோ அல்லது உங்கள் வயிற்றின் சுருக்கத்திற்கோ செல்லாது அவர்களின் பார்வையில் உங்கள் சட்டையின் டார்க் நிறம் மட்டுமே தெரியும்.அவர்கள் கண்களுக்கு உங்கள் தொப்பை தெரியாமல் மறைந்துவிடும்.
செக்குடு ஷர்ட்: தொப்பை உள்ளவர்கள் பெரிய கட்டம் உள்ள சட்டைகளை தவிர்த்து சிறிய கட்டங்கள் உள்ள சட்டைகளை அணிவதால் பார்ப்பவர்களுக்கு உங்கள் தொப்பையை தெரியாது.
லைன் பிரிண்டெட்: தொப்பை உள்ளவர்கள் 'horizontal line' உள்ள சட்டைகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அந்த வகை சட்டைகளை போடும் பொழுது பார்ப்பவர்களின் பார்வையும் அதேபோல் horizontalலாகவே இருக்கும். அப்பொழுது அவர்கள் பார்வைக்கு உங்கள் தொப்பை எளிதில் தெரியவரும்.
அதற்க்கு பதிலாக 'vertical line' சட்டைகளை அணியலாம், இது போன்ற சட்டைகளை நீங்கள் அணியும் பொழுது பார்ப்பவர்கள் மேலிருந்து கீழ் தான் பார்ப்பார்கள் ஆகையால் அவர்கள் பார்வைக்கு உங்கள் தொப்பை எளிதில் தெரியாது.
ஒரு சட்டைக்கு மேல் ஒரு சட்டை போன்று வித்யாசமாக சட்டை அணிவதன் மூலம் உங்ககள் தொப்பை வெளியே தெரிவதை மறைக்கலாம்.
டி-ஷர்ட்:
தொப்பை உள்ளவர்கள் ரவுண்ட் நெக் டி-ஷர்ட் அணிவதற்கு பதிலாக வீ நெக் டி-ஷர்ட் அணிந்தால், பார்ப்பவர்களின் பார்வை முழுவதும் அந்த டி-ஷர்ட்டில் தான் இருக்கும் அவர்களுக்கு உங்கள் தொப்பை தெரியாது.
low rise: தொப்பை உள்ளவர்கள் low rise பேன்ட் போட்டால் அவர்களின் தொப்பை மடிந்து வெளியே வரும், பார்ப்பவர்களுக்கு தொப்பை பெரிதாக தெரியும்.
High rise or Mid rise: தொப்பை உள்ளவர்கள் High rise or Mid rise பேன்ட் போட்டால் அவர்களின் தொப்பை மறைந்து பார்ப்பதற்கு அழகாக தோற்றமளிப்பார்கள். மேலும் பேண்டின் அடுத்த சைஸ் போட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
Pleat: பருமனாக உள்ளவர்கள் Pleat போன்ற பேன்ட் அணிந்தால் அவர்களின் தொடை பெரிதாக தெரியும். அதனால் அதுபோன்ற பேன்ட்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
நாம் எப்போதும் துணி எடுக்கும் போது சரியான அளவில் தான் துணி எடுப்போம். ஆனால் பருமனாக உள்ளவர்கள் துணி எடுக்கும் பொழுது ஒருமுறை போட்டு பார்த்து எடுக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் அளவு 38 ஆக இருக்கும் சில கம்பெனி சட்டைகள் அவர்களுக்கு சரியாக இருக்கும் சில கம்பெனி சட்டைகள் அவர்களுக்கு சரியாக இருக்காது, ஆகையால் ஒரு முறை சட்டையை போட்டு பார்த்து வாங்க வேண்டும். பருமனாக உள்ளவர்கள் துணி எடுக்கும் பொழுது அவர்கள் அளவை விட ஒரு அளவு பெரிதாக துணி எடுக்க வேண்டும் ஏனெனில் எந்த ஒரு துணியாக இருந்தாலும் துவைத்த பிறகு சுருங்கும் எனவே பருமனாக உள்ளவர்கள் அவர்களின் அளவை விட ஒரு அளவு பெரிதாக துணி எடுத்தால் நன்றாக இருக்கும்.