Face Detox to brighten the face. 
அழகு / ஃபேஷன்

முகத்தை பளபளப்பாக்கும் Face Detox!

கிரி கணபதி

ங்கிலத்தில் Detoxification என்ற ஒரு வார்த்தை உண்டு. இதை சுருக்கமாக Detox என அழைப்பார்கள். சமீப காலமாகவே இந்த வார்த்தையை பல இடங்களில் நாம் கேள்விப்படுகிறோம். இதற்கான அர்த்தம் என்னவென்றால், உடலில் உள்ள கெட்ட விஷயங்களை வெளியேற்றுவது என அர்த்தம். நாம் எப்படி நம் உடலில் உள்ள கெட்ட விஷயங்களை Detox செய்து சுத்தப்படுத்துகிறோமோ, அதேபோல முகத்தையும் Detox செய்ய முடியும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மேலும் பளபளப்பாக மாறிவிடும். 

முகத்தை Detox செய்வதற்கு முதலில் சோப்பு போட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். முகத்தை கழுவும் போது டபுள் களென்ஸிங் முறை எனப்படும் இரண்டு முறை முகத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இப்படி இரண்டு முறை கருவினால் சருமத்திற்கு அடியில் உள்ள அழுக்குகள், மேக்கப் சாதன பொருட்கள், லோஷன்கள், சன் ஸ்கிரீன் உள்ளிட்டவை நீங்கும். 

அடுத்ததாக நம்முடைய சருமத்தில் தினசரி இறக்கும் செல்களை நீக்கி புதிய செல்களின் உற்பத்தியை அதிகரிக்க ஸ்க்ரப் வைத்து தேய்ப்பது அவசியம். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய செல்களை உற்பத்தி செய்யும். இதை வாரத்திற்கு இருமுறை செய்வது நல்லது. அடுத்ததாக வாரத்திற்கு ஒருமுறை கிளேமாஸ்க் பயன்படுத்துங்கள். இது முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவும். கிளே மாஸ்க் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் முல்தானிமட்டியும் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள எல்லா கெட்ட விஷயங்களையும் நீக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

உங்கள் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீராவது நாம் குடிக்க வேண்டும். அப்படி நாம் குடிக்கும்போது உடல் முழுவதிலும் உள்ள கழிவுகள் தானாக வெளியேறும். மேலும் முகத்தை அவ்வப்போது மசாஜ் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் ஆயில் மசாஜ் செய்யலாம் அல்லது மஞ்சள் மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் முகத்தின் பளபளப்புத்தன்மை கூடும். 

இந்த விஷயங்களை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே, முகம் பளபளப்பாக மாறி சருமம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT