Primer for face
Primer for face 
அழகு / ஃபேஷன்

உங்கள் சருமத்திற்கு ஏற்ற Primer-ஐ தேர்ந்தெடுப்பது எப்படி?

பாரதி

நமது சருமத்தில் மென்மையாகவும், வெகுநேரம் நீடிக்கக் கூடியதாகவும், இயல்பாகவும் இருக்கும்படியான ப்ரைமரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனெனில், நம் சருமத்திற்கு ஒத்துவராத ப்ரைமரைப் பயன்படுத்தினால், முகம் செயற்கையான அழகில் இருப்பது போலத் தோன்றும். அது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைப்பதோடு நமக்கும் ஒரு விசித்திரமான உணர்வைத் தரும். ஆகையால் ப்ரைமரைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.

ப்ரைமரைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சருமத்தின் டைப்:

உங்களுடைய சருமம் உலர்ந்த சருமமா? எண்ணெய் பசை உள்ள சருமமா ? அல்லது இரண்டும் கலந்த காம்பினேஷன் சருமமா? என்பதைக் கண்டுப்பிடியுங்கள். ஒவ்வொரு டைப் சருமத்திற்கும் ப்ரைமர் மாறும்.

  1. உலர்ந்த சருமம்: உலர்ந்த சருமம் கொண்டவர்கள் ஊட்டமளிப்பதற்கும் ஈரப்பதத்தை கொடுப்பதற்கும் ஏற்ற ப்ரைமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது Glycerine, Hyaluronic அமிலம் கொண்ட Hydrating ப்ரைமர்களைப் பயன்படுத்தலாம்.

  2. எண்ணெய் பசையுள்ள சருமம்: இவர்கள் எண்ணெய் இல்லாத அல்லது Mattyfying ப்ரைமர்களைப் பயன்படுத்தலாம்.

  3. காம்பினேஷன் சருமம்: இவர்கள் எண்ணெய் பசை அல்லது உலர்ந்த சருமங்களுக்குப் பயன்படுத்தும் இரண்டு வகையான ப்ரைமர்களையும் பயன்படுத்தலாம். அதேபோல் இரண்டையும் முகத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.

சருமத்தின் பிரச்சனைகளுக்கு ஏற்ற ப்ரைமர்கள்:

சருமத்தில் ஆங்காங்கே சிவப்புகள் படிந்திருந்தால், அவர்கள் பச்சை நிற ப்ரைமர்கள் பயன்படுத்தலாம்.

சருமம் பொலிவிழந்து இருந்தால், பொலிவைத் தரும் அதற்கான ப்ரைமர்களைத் தேர்ந்தெடுங்கள்.

சருமத்தில் துளைகள் பெரிதாக இருந்தால், அவர்கள் சிலிகான் அடிப்படையிலானப் ப்ரைமர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

கோடுகள் அல்லது சுருக்கங்கள் உள்ளவர்கள் Peptide அல்லது Anti Oxident ஆகியவை இருக்கும் ப்ரைமர்களைப் பயன்படுத்தலாம்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க:

சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க SPY ப்ரைமர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இது முற்றிலுமாக பாதுகாக்குமா? என்ற சந்தேகம் இருப்பவர்கள் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். அனைவருமே சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லது.

சோதித்து வாங்க வேண்டும்:

ப்ரைமர் வாங்குவதற்கு முன்னர் அட்டையில் இருக்கும் எழுத்துக்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா? என்று தெரிந்துக்கொண்டு வாங்குவது நல்லது. அதேபோல் ஒருமுறை சருமத்தில் சோதனை செய்து பார்த்து வாங்குவது இன்னும் நல்லது.

ப்ரைமர் வகைகள் மற்றும் அதன் பயன்பாடு:

ஸ்ப்ரே ப்ரைமர்கள்: இதனை அனைத்து சரும டைப்பைக் கொண்டவர்களும் பயன்படுத்தலாம். ஏனெனில் இது விரைவாகவே இலகுவான தன்மையைக் கொடுக்கும்.

க்ரீம் மற்றும் ஜெல் ப்ரைமர்கள்:

இவற்றை முதிர்ந்த சருமத்திலும் உலர்ந்த சருமத்திலும் பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் தரும்.

சிலிகான் ப்ரைமர்கள்:

இவை சருமத்தின் துளைகளை அடைத்து நீண்ட நேரம் மேக்கப் இருப்பதற்கு வழிவகுக்கும்.

குறிப்பு:

ப்ரமைரை சிறிதளவு மட்டுமே எடுத்து முகம் முழுவதும் சமமாகத் தடவுங்கள். மேக்கப் போடுவதற்கு முன்னர் கட்டாயம் ப்ரைமர் பயன்படுத்தி சில நிமிடங்கள் காய விடுவது அவசியம்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT