Peel of Mask 
அழகு / ஃபேஷன்

'பீல் ஆஃப் மாஸ்க்' பயன்படுத்துபவரா நீங்க? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சுக்கோங்க..

மணிமேகலை பெரியசாமி

பொதுவாகவே, சருமப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு தூசி, பாக்டீரியா, காலநிலை மாற்றம் மற்றும் ஒழுங்கற்ற சருமப் பராமரிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சருமத்தை பராமரிப்பதற்கு என்றே பிரத்தேயகமாக இயற்கை மற்றும் செயற்கை மூலப்பொருள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பல அழகு சாதனப் பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. இந்தப் பொருள்களை பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சருமத்தை பாதுக்காக்கவும், சருமப் பிரச்னைகளை சரி செய்வதற்கும்  பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு அழகு சாதனப் பொருள் தான் பீல் ஆஃப் மாஸ்க்.  உண்மையில், பீல் ஆஃப் மாஸ்க்கை பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை அளிக்குமா? பீல் ஆஃப் மாஸ்க்கை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை  என்னென்ன? என்பதைப்  பற்றி இந்தப் பதிவில் தெளிவாகக்  காணலாம்.

பீல் ஆஃப் மாஸ்க் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:

  •  இது முகத்தில் ஏற்படும் வெண்புள்ளிகளை ஆழமாகவும், கரும்புள்ளிகளை மேலோட்டமாகவும் அகற்றப் பயன்படுகிறது.

  • முகத்தில் படும் தூசி, அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்குவதற்கு பீல் ஆஃப் மாஸ்க் உதவி புரிகிறது. இதனால், பொலிவான பளபளப்பான சருமத்தைப் பெற முடியும்.

  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பீல் ஆஃப் மாஸ்க்கை  பயன்படுத்தும்போது, அது முகப்பரு மற்றும் சருமத்தில் உள்ள சுருக்கங்களை சரி செய்வதுடன் சருமத்திற்கு  இயற்கையான பொலிவைத் தருகிறது.

  • எண்ணெய் வழியும்  சருமம் உடையவர்களுக்கு இந்த பீல் ஆஃப் மாஸ்க் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. இது, சருமத்தில் உள்ள துளைகளை அடைப்பதன் மூலம், சருமத்தில் எண்ணெய் சுரப்பதை தடுக்க உதவுகிறது. மேலும், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் பேக் மற்றும் டோனர் போன்ற பொருள்களை விட பீல் ஆஃப் மாஸ்க் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்கிறது.

பீல் ஆஃப் மாஸ்க்கை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை:

  • பீல் ஆஃப் மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்தும்போது, அது சில சருமப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, இதை தேவைக்கு ஏற்ப வாரம் 1 அல்லது 2 முறை பயன்படுத்துவது நல்லது.

  • இது சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை மட்டுமே அகற்றுகிறது. சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை பீல் ஆஃப் மாஸ்க் அகற்றாது.

  • பெரும்பாலும், ஜெல் அல்லது நீர் சார்ந்த பீல்-ஆஃப் மாஸ்க்கை பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும்.

  • Threading மற்றும் Waxing செய்த பின்னர் இந்த பீல் ஆஃப் மாஸ்கினை கட்டாயம் முகத்திற்கு பயன்படுத்த கூடாது.

  • பீல்-ஆஃப் மாஸ்க் பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் பொலிவானது நிரந்தரமானதல்ல. இறந்த செல்கள் மற்றும் முகத்தில் உள்ள அழுக்குகளை  நீங்குவதால் தான் தற்சமயம் சருமம் பொலிவாகத் தெரிகிறது.

  • உணர்திறன் வாய்ந்த சருமம் மற்றும் வறண்ட சருமத்திற்கு பீல்-ஆஃப் மாஸ்க் பொருத்தமானதாக கருதப்படுவதில்லை. எனவே, இத்தகைய சருமம் உடையவர்கள் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்த பின் பயன்படுத்துவது நல்லது.

  • இந்த மாஸ்க்கை பயன்படுத்திய பிறகு, சருமத்தில் ஏதேனும் எரிச்சல், அரிப்பு இருப்பது போல் உணர்ந்தால், உடனடியாக முகத்தை கழுவி விடுவது நல்லது. கழுவிய பிறகும் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

  • அதோடு, பீல் ஆஃப் மாஸ்க்கை பயன்படுத்துவதால் வலி மற்றும்  சிலசமயங்களில் சருமத் துளைகள் சேதமடைய வாய்ப்புள்ளதால், சரும நிபுணர்கள் பெரும்பாலும் இதை பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை.

பிரக்ஞையுடன் உள்ள மகிழ்ச்சி நிறைவு தரும்!

Ind Vs Ban: பவுலிங் செய்த 7 பேரும் விக்கெட் எடுத்த சம்பவம்… ரசிகர்கள் ஷாக்!

Part 2: ஒவ்வொரு தெய்வங்களுக்கான பிரத்யேக காயத்ரி மந்திரம்!

மனிதர்களுக்கு மனநல ஆரோக்கியம் ஏன் முக்கியம் தெரியுமா?

திருப்பதி பிரமோற்சவ விழாவை முதன்முதலில் நடத்தியது யார் தெரியுமா?

SCROLL FOR NEXT