Janhvi kapoor beauty tips 
அழகு / ஃபேஷன்

Janhvi kapoor beauty tips: ஜான்வி கபூரின் அழகின் ரகசியம் இதுதான்!

பாரதி

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது அழகின் ரகசியம் இதுதான் என்று பகிர்ந்துள்ளார். அதுபற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் 2018ம் ஆண்டு தடக் என்ற ஹிந்தி படத்தின்மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து 10 ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தேவரா படத்தின்மூலம் தெலுங்கில் அறிமுகமாகியிருக்கிறார். சமீபத்தில்கூட படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், தமிழில் சரளமாக பேசியது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

அந்தவகையில் இவரின் அழகின் ரகசியம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருப்பார். இதுகுறித்து பார்ப்போம். ஜான்வி கபூரின் பளபளப்பான சருமத்திற்கு பால் பொருட்களும் மில்க் க்ரீம்களும்தான் அதிகம் பயன்படுத்துவாராம். இந்த பொருட்களைப் பயன்படுத்தியே ஃபேஸ் பேக் போடுவதாக கூறியிருந்தார்.

மலாய் ஃபேஸ் மாஸ்க்குகள் எப்போதும் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவும்.  இது சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதோடு எக்ஸ்ஃபோலியேட் செய்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதனால் சருமத்தில் பருக்கள் போன்றவை வராமல் தடுக்க முடியும்.

மலாய் க்ரீம்கள் வாங்கமுடியாவிட்டால், வீட்டில் இருக்கும் பாலுடன் சந்தனம், பாதாம், ஆரஞ்சு, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் மாஸ்க் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.

மற்றொரு ரகசியம்:

முதலில் முகத்தை நன்றாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு ஆவி பிடிக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் தேனை ஊற்றி பிசைந்து வைத்த வாழைப்பழத்தில் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இது முகத்திற்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

பாதி அறுத்த ஆரஞ்சு பழத்தில் விதைகளை நீக்கி முகத்தின் மீது சிறிது நேரம் தேய்க்க வேண்டும் அதன் பிறகு சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இது டெட் செல்களை நீக்கிவிடும். இரண்டு மூன்று நிமிடங் களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். முகம் பொலிவாகிவிடும்.

இவையே ஜான்வி கபூர் அழகின் ரகசியம். இந்த வழிகளை நீங்களும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT