பப்பாளி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஒரு மருந்தாகும். பப்பாளி பிடிக்காது என யாரும் சொல்லமாட்டார்கள். மீண்டும் சாப்பிட வேண்டும் என கேட்கும் சுவையில் பப்பாளி இருக்கும். பப்பாளியை உட்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நமக்கு தெரியும். பப்பாளியை சருமத்தில் தேய்த்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
இயற்கையின் பரிசான பப்பாளி பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் போன்றது. உடல் ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு தொடங்கி சரும பிரச்சனை, முடி உதிர்வு, மாதவிடாய், மலசிக்கல் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்கிறது.
பப்பாளியை எப்படி உபயோகித்தால் என்னென்ன பயன்களை அடையலாம் என பார்க்கலாம்.
பெண்களுக்கு இருக்கும் பெரிய கவலையில் ஒன்று கொஞ்ச நேரம் வெயிலில் சென்றுவிட்டு வந்தால் முகம் கருமையாவது தான். இதற்காக பல பெண்கள் தற்போது சன் ஸ்க்ரீன் பயன்படுத்தி வருகின்றனர். இனி கவலை வேண்டாம் அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் பப்பாளி பழம் நிச்சயம் தீர்வளிக்கும்.
பப்பாளி ஃபேஸ் மாஸ்க்:
நன்கு பழுத்த பப்பாளி பழங்களை எடுத்து மசித்து முகத்தில் பேஸ் மாஸ்க் போடவும். 15 - 20 நிமிடம் வரை காயவிட்டு பிறகு கழுவி விடவும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
பப்பாளி ஸ்க்ரப்:
பப்பாளி பழத்துடன் சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் போன்று முகத்தில் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கெல்லாம் நீக்கி சாப்டாக வைத்திருக்கும்.
பப்பாளி பாடி ஸ்க்ரப்:
உடல் முழுவதும் சருமத்தை பாதுகாக்க இந்த பப்பாளி ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம். பழுத்த பப்பாளி பழத்தை நன்கு மசித்து பேஸ்ட் போல வைத்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி மிருதுவாக இருக்கும்.