அழகு / ஃபேஷன்

பளபளக்கும் பட்டு சருமத்துக்கு பத்து டிப்ஸ்!

சேலம் சுபா

* உண்ணும் உணவு அனைத்து சத்துகளும் கொண்ட சரிவிகித உணவாக இருந்தால் சருமம் பாதிப்புகளின்றி பொலிவு பெறும்.

* சருமத்தின் அழகு ரகசியம் நாம் அருந்தும் நீரிலேயே உள்ளது . தினம் சுமார் மூன்று லிட்டர் அளவு நீரை அவ்வப்போது கண்டிப்பாக அருந்தவேண்டும்.

* சருமத் துவாரங்களில் சேரும் அழுக்குகள் பருக்களை உண்டாக்கும். இதைத் தவிர்க்க தினம் நான்கைந்து முறை முகத்தைக் கழுவ வேண்டும்.

* மஞ்சள் பூசிக் குளித்தால் சருமம் தேவையற்ற முடிகள் நீங்கி பளபளப்புடன் அழகு தரும்.

* சிறுசிறு கொப்புளங்களுக்கு வேப்பிலைக் கொழுந்துகளை நீரில் காய்ச்சி வடிகட்டி கொப்புளங்கள் மீது தடவலாம். இயற்கையான டோனர் இது.

* வாரத்தில் மூன்று நாட்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்தால் இயற்கையாகவே சருமம் பளபளப்பு பெறும்.

* வினிகர் ஒருபங்கு நீர் ஒருபங்கு கலந்து உடலில் தடவிக் குளித்தால் பாதிப்பேற்படுத்தும் கிருமிகளில் இருந்து தப்பிக்கலாம்.

* சுத்தமான ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு பூசி சிறிது நேரம் மிதமான சூரிய ஒளியில் இருந்து குளித்தால் சருமம்.

* இரவு தூங்கும்முன் பால் அருந்துவது சருமத்துக்கு மெருகைத் தரும்.

* சருமம் இயற்கையாகவே மிருதுவானதால் செயற்கை பொருள்களை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் பராமரிப்பது நல்லது.

மகாலட்சுமி தாயாருக்கு தீபாவளி சீர் கொடுக்கும் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?

சந்தையில் வலம் வரும் போலி பனீர்… ஜாக்கிரதை மக்களே! 

தார்வாட் பேடா: கர்நாடகாவின் சுவை நிறைந்த இனிப்பு!

நாங்கள் கொண்டாடிய சாகச தீபாவளி!

நாக்கில் உள்ள புண்ணை விரைவில் குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்! 

SCROLL FOR NEXT