அழகு / ஃபேஷன்

பாதங்கள் பளபளக்க... பட்டான பத்து டிப்ஸ்!

கல்கி டெஸ்க்

* வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசினால் கால் வெடிப்பு குணமாகும். தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்துத் தேய்த்தாலும், கால் வெடிப்பு மறையும்.

* இரவில் கைபொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் கால்களை ஊறவைத்து, கால் களுக்குத் தேய்க்கும் பிரஷ் அல்லது ப்யூமிக் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் துடைத்துவிட்டு ஃபுட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யவும்.

* ஒருநாள் விட்டு ஒருநாள் எலுமிச்சம் பழத்தோலால் பாதங்களை நன்றாகக் தேய்த்துக் கழுவ வேண்டும். இது கால்வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி பாதங்களைச் சுத்தமாக்கும். கிருமிகளையும் அழிக்கும்.

* கடுகு எண்ணெயை தினமும் கால், பாதம் மற்றும் கைகளில் தேய்த்துக் கழுவி வந்தால் சொர சொரப்புத் தன்மை நீங்கி, மிருதுவாகும்.

* முதல்நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரைத் தொட்டுத் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டுத் தேயுங்கள். தொடர்ந்து இப்படிச் செய்துவர, பாதம் மெத்தென்று ஆகும்.

* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவி வந்தால், முரட்டுத்தன்மை நீங்கி கை-கால்கள் பளிச்சென்று மென்மையாகும்.

* மருதாணிப் பவுடருடன், டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்துக்கொண்டால் கால்வெடிப்பு நீங்கி உடல் குளிர்ச்சியாய் இருக்க உதவும். மருதாணி இலையுடன் எலுமிச்சைச் சாறுவிட்டு விழுதாக அரைத்து, கால் வெடிப்பில் பூசி வர, கால் வெடிப்பு குணமாகும்.

* கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தைத் தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

* உருளைக்கிழங்கைக் காயவைத்து, மாவு போன்று அரைத்துத் தண்ணீரில் குழைத்து, பூசி வந்தால், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

* வெங்காயத்தை அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.

குறிப்பு: கால் வெடிப்பு தோல் வறட்சியால் ஏற்படுகிறது. துணி துவைக்கும்போது சோப்பு நீரில் நிற்காமல் பார்த்துக்கொள்ளவும். காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும்.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT