அழகு / ஃபேஷன்

கலக்குதே போஹோ ஸ்டைல்! என்னனு தெரியுமா?

மங்கையர் மலர்

நாடோடித்தனமான, பழங்குடி, ஆதிவாசி ஃபேஷனின் தாக்கம் உங்கள் ட்ரஸ்ஸில் பிரதிபலிக்கிறதா? எந்த ஒரு ட்ரஸ் போட்டாலும் அதில் உங்களுடைய தனி முத்திரை தெரியுதா அப்படியானால் நீங்கள் போஹோ ஸ்டைல் ஷீக் பெண் (Boho style chic).

இந்த போஹோ லுக்குக்கு உலகெங்கிலும் பெண்கள் அடிமை. 60களில் ஆரம்பித்த இந்த ஸ்டைல் இன்று ஹாலிவுட், பாலிவுட் தாண்டி கல்லூரிப் பெண்கள் வரையில் பிரபலமாகிவிட்டது.

போஹோ லுக்குக்கென்று கண்டிஷன், வரைமுறை, ஒழுங்கு, கட்டுப்பாடு என்று எதுவுமே கிடையாது. அதற்காக ஆபாசம் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். 'என் வழி தனி வழி': 'என் ஸ்டைல் பெஸ்ட் ஸ்டைல்' என தன்னுடைய ஆடை மூலமாகச் சொல்வதே போஹோ ஸ்டைல்.

சரி, ட்ரஸ் எப்படி இருக்கும்? லாங் ஃப்ளோயிங் ஸ்கர்ட், எம்ப்ராய்டர்ட் ட்யூனிக்ஸ், அகல பெல்ட், கழுத்தில் பட்டைப் பட்டையாக பீட்ஸ், தலையில் பெரியதாக ஒற்றைப் பூ, காலில் வித்தியாசமான காலணிகள்.... என எதிலுமே டிஃப்ரன்ட் தோரணை. ஒரு ஹிப்பித்தனமான லுக் எனச் சொல்லலாம்.

போஹோ ஸ்டைலுக்கு என்னென்ன தேவை?

சிம்பிள் மாக்ஸி ஸ்கர்ட்: சிம்பிளான லாங் ஸ்கர்ட் போடுங்க. மேலே கிராஃபிக் டீ ஷர்ட் போட்டு கால்களில் கிளாடியேட்டர் காலணி மாட்டி தலைமுடியை டாப் நாட் போடவும். பிரைட் லிப்ஸ்டிக் போட்லாம்.

ஜியோமெட்ரிக் ப்ரின்ட்ஸ்: இவ்வகை பிரின்ட்டுக்கு ஏக டிமான்ட் கோடுகள், ஸ்ட்ரைப்ஸ், விதவித முக்கோன, செவ்வக வடிவங்கள் என ஜியோமெட்ரிக் ப்ரிண்ட் போட்டால் போஹோ ஸ்டைல்.

சங்கி ஜீவல்லரி: அக்ஸஸரீஸ் கரெக்டா போடணும். மரவளையல்கள், பெரீய்ய காதணிகள், தொங்கட்டான்கள், ஸ்டேட்மென்ட் பீஸாக நெக்பீஸ், மெட்டல் வளையல்கள், ஆர்ம்லெஸ் என சங்கி ஜூவல்லரியில் பின்னி எடுங்க.

ஹான்ட்பேக்: கான்வஸ் மெஸன்ஜர் பேக் மாட்டலாம். ஓவர் சைஸ் பர்ஸ் எடுத்துக் கொள்ளலாம். க்ராஸ் பாடி பேக்ஸ் போட்டு திமிர் நடை போடலாம்.

வெர்ஸ்டைல் வெஸ்ட்: நம்முடைய 'நமோ' ஸ்டைல் வெஸ்ட் கூட போஹோதானுங்கோ. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் டெமினில், காட்டனில் போட்டால் 'பிரதமர் மோடி மாதிரியே மக்களும் ஃபேஷனில் முத்திரை பதிக் கறாங்களே' என அண்டை நாட்டில் பேசிக் கொள்வார்கள்.

ஸ்கார்ஃப்: பிளெயின், ப்ரின்டட், லேஸ் என ஸ்கார்ஃபில் பல வகை. கழுத்தில் சுற்றி விட்டுக் கொண்டால் ஸ்டைல் பீஸாகி விடும். ஜீன்ஸ், லெகிங்ஸ், ஸ்கர்ட் எதனுடனும் போடலாம்.

க்ளாடியேட்டர் காலணி: க்ராஸ் க்ராஸாக பல பட்டைகள் கொண்ட இவ்வகை காலணிகள் போஹோ ஸ்டைலுக்கு ஒத்து ஊதும். பல கலர்களில் வரும்.

சன் க்ளாஸ்: பர்ஃபெக்ட் போஹோ லுக் என்றால் அது கூலிங் கிளாஸ் போட்டால்தான் கிடைக்கும். விதவித ஷேப்களில் வரும். கலச்சுவிட்ட தலைமுடி ஸ்டைல் ப்ரைட் லிப்ஸ்டிக், ஹ்யூஜ் சைஸில் கூலிங்க்ளாஸ்... அடடா... அட்டகாச போஹோலுக் தானுங்கோ.

எது போஹோ?

ஹிப்பி ஃபேஷனில் ஆரம்பித்த ஸ்டைல்தான் போஹோ ஸ்டைல். ஹாலிவுட் பிரபலங்கள் சியன்னா மில்லர் மற்றும் கேட்மோஸ் இதை மிகப் பிரபலமாக்கிய நடிகைகள்.

நம் ஊரில் இது தற்போதைய ட்ரென்ட். இங்கு பல மலை ஜாதி, பழங்குடி மக்கள் இருக்கின்றனர். அவர்களுடைய நகைகள், தலைமுடி ஸ்டைல், காலில் மாட்டும் கொலுசுகள் என வித்தியாசமாகப் போட்டு ஸ்டைல் அவதாரம் எடுக்கலாம். தவறில்லை.

தலைமுடியில் பண்டானா, சணல் கயிறு மாலைகளை மாட்டினால் அது போஹோ ஸ்டைல்.

ட்ரஸ் பேசணும். மினிமம் மேக் அப், அலட்டல் பார்வை, கழுத்தில் இடுப்பில் காயின் மாலைகள், விதவிதமான ஹெட்பான்ட், பளீர் கலர் உடைகள்... இப்படி இருந்தால் போஹோ.

டாங்க் டாப், மாக்ஸி ஸ்கர்ட், ஸ்லிங்பேக் லாங் செயின், லெதர் பூட்ஸ், ஹீப் இயர்ரிங்ஸ், ஹெட் பான்ட்ஸ்... இது இருந் தாலே போஹோவில் ஓஹோ வென பெயரெடுக்கலாம். இது செம காஷுவல்.

காஷுவல் லுக்கில் அசத்தணுமா? வொயிட்டாப், ரிப்ட் (அதாங்க கிழிசல்). டெனிம், பீட்ஸ் மாலை, இறகு காதணி, மரம் மற்றும் பீட்ஸ் பிரேஸ்லெட்ஸ், கிளாடியேட்டர் காலணி போட்டால் கான்ஃபிடன்ட் கேர்ள் நீங்கதான்.

க்ரியேட்டிவா, கர்வமா, அலட்சியமா ட்ரஸ் பண்ணுங்க. போஹோவில் ஓஹோன்னு வருவீங்க. அம்மா கத்தணும், 'என்ன ஹிப்பியாட்டமா ட்ரஸ்ஸுன்னு. பசங்க 'லூஸ்தனமா ட்ரஸ் பண்றாடா'ன்னு ஃபீல் பண்ணணும். ஆனா உங்க க்ரூப் பெண்கள், கல்லூரி மொத்த பெண்களுமே 'எப்படி இவ மட்டும் வித்தியாசமா ட்ரஸ் பண்ணி நம்மைக் கடுப்பேத்தறான்னு பொருமனும் அது உங்கள் போஹோ ஸ்டைலுக்கு வெற்றி!

துணிந்தாருக்கு துக்கம் இல்லை!

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

SCROLL FOR NEXT