உலகில் எத்தனையோ பறவைகள் இருந்தாலும், அவற்றில் வித்தியாசமான மற்றும் அழகிய பறவைகளைப் பார்ப்பது என்பது அதிசயமாகவும், ஆர்வத்தைக் கூட்டுவதாகவும் இருக்கும். அத்தகைய வித்தியாசமான 3 பறவைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Grey crowned crane: ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் ஒருவகையான கொக்குதான் இந்தப் பறவை. இதன் தலையில் கொண்டை மாதிரி அழகான அமைப்பு ஒன்று இருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பறவை உகாண்டா நாட்டின் தேசியப் பறவையாக இருக்கிறது. இந்த பறவை கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் பறவை செல்வத்தையும், நீண்ட ஆயுளையும் குறிக்கும் சின்னமாக கருதப்படுகிறது. இந்தப் பறவை அதன் தங்கநிற கொண்டைக்கும், ஒன்றோடு ஒன்று சேர்ந்து நடமாடுவதற்காகவும் புகழ் பெற்றதாகும்.
2. Flamingos: இது பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய மிக நீளமான கால்களை கொண்ட நீர்ப்பறவையாகும். நீளமான கழுத்தைக் கொண்ட மிகவும் அழகான இந்தப் பறவையை இந்தியாவில் கூடக் காண முடியும். இந்தப் பறவை ஒற்றைக்காலில் 4 மணி நேரம் தொடர்ந்து நிற்கக்கூடியதாகும். பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும் Flamingo பறவை, அது உண்ணும் உணவின் காரணமாகவே பிங்க் நிறத்தில் மாறுவதாக சொல்லப்படுகிறது. ஒடிசாவில் உள்ள chilika lakeல் இந்த பறவையை காண முடியும்.
3. Toucans: அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பறவைகள் மிகவும் பெரிய மூக்குடன் பார்ப்பதற்கு பல வண்ணங்களில் மிகவும் அழகாக இருக்கும்.
இதன் மூக்கு பார்ப்பதற்கு கனமாக இருப்பது போல தெரிந்தாலும் மிகவும் லேசாகவே இருக்குமாம். இந்தப் பறவை 20 வருடங்கள் வாழக்கூடியது. இதன் அழகிய வண்ணங்களுக்காக மிகவும் பிரபலமான பறவைகள் லிஸ்டில் இதுவும் இருக்கிறது.
காடுகளில் அதிகம் சத்தம் போடக்கூடிய பறவையாகும் இது. எனினும் மற்ற பறவைகளுடன் அன்பாகவே பழகக்கூடியதாகும். இந்தப் பறவையை Monomorphic என்று கூறுவார்கள். ஆண் பறவையையும், பெண் பறவையையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியே இருக்கும். இந்த மூன்று வித்தியாசமான பறவையில் எந்தப் பறவை உங்களைக் கவர்ந்தது என்று சொல்லுங்கள்.