விநோத கிரகத்தில் இருப்பது போன்று உணர வைக்கும் உலகில் உள்ள 3 இடங்கள்!

3 places in the world that will make you feel like you are on a strange planet!
3 places in the world that will make you feel like you are on a strange planet!Image Credits: Wticifes
நான்சி மலர்

கொங்கு பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் பட்டதாரியான நான்சி மலர், கோரா (Quora) வாயிலாக எழுத்துலகில் காலடி வைத்து சுவாரசியமாக எழுதக் கற்றவர். கல்கி ஆன்லைன் ஊடகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பதிப்பீடு, சமூக வலைதளம், எடிட்டிங் மற்றும் எழுத்துப்பணியில் நிபுணத்துவம் பெற்றவர். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, பயணம், சுற்றுச்சூழல் குறித்த இவரது கட்டுரைகளும் கல்கியில் வெளியான சிறுகதைகளும் வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளன.

Updated on: 

இந்த உலகில் எத்தனையோ அழகிய இடங்கள் இருக்கின்றன. இயற்கை உருவாக்கிய அழகோவியமாய் திகழும் அத்தகைய இடங்கள் நம்மை கவர்வது போலவே இன்னும் சில இடங்களை காணும்போது ஒருவேளை தவறுதலாக வேற்று கிரகத்திற்கு வந்து விட்டோமோ? என்ற பிரம்மையை உருவாக்கக்கூடிய விநோதமான சில இடங்களும் இதே உலகில் அமைந்திருக்கிறன. அத்தகைய வித்தியாசமான 3 இடங்களைப் பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1. Faroe island.

டென்மார்க்கில் இருக்கக்கூடிய Faroe island அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள விசித்திரமான தீவாகும்.கடலுக்கு நடுவிலே உயரமான அருவிகள், மலைகள், ஏரிகள், பசுமையான புல்வெளிகள் என்று இந்த தீவை சுற்றி எந்த பக்கம் பார்த்தாலும் மிகவும் அற்புதமாக இருக்குமாம். ஒரு ரிலாக்ஸான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லலாம்.

2. Spotted lake.

இந்த Spotted lake கனடாவில் இருக்கிறது. இது பார்ப்பதற்கு இயற்கையாக உருவான Artwork போன்று இருக்கும். இங்கே உள்ள தண்ணீர் நிறம் மாறக்கூடியதாகும். பிரிட்டிஸ் கொலம்பியா என்ற பகுதியில் இருக்கும் மிகவும் வித்தியாசமான ஏரி தான் இது. இந்த ஏரியில் Magnesium sulphate, calcium, sodium sulphates போன்ற பலவிதமான கணிமங்கள் அமைந்திருப்பதால் பார்ப்பதற்கு இப்படி வித்தியாசமான அமைப்பில் அமைந்திருக்கிறது.

3. Lencois Maranhenses.

பிரேசிலில் உள்ள தேசிய பூங்காவில் அமைந்திருக்கும் இந்த இடம் 3,80,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வெள்ளைப் பாலைவனம் ஆகும். இந்த வெள்ளைப் பாலைவனத்திற்கு நடுவிலே தண்ணீர் தேங்கி நீலநிறத்தில் பார்ப்பதற்கே மிகவும் அற்புதமாக காட்சியளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீலங்காவின் மிக அழகிய ரயில் பயணம்... சேர்ந்து பயணிக்கலாம் வாங்க!
3 places in the world that will make you feel like you are on a strange planet!

மழைக்காலத்தில் இந்த வெள்ளைப் பாலைவனத்தில் தண்ணீர் தேங்கி நீர்நிலைகளாக உருவாகியிருப்பது காண்போரைக் கவரக்கூடியதாக இருக்கும். ‘எந்திரன்’ படத்தில் வரக்கூடிய காதல் அணுக்கள் பாடல் இங்கே தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அதிசயமான இடங்களுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று அதன் இயற்கை அழகை ரசித்துவிட்டு மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்வது சிறப்பாகும்.