Best Aquariums in the World 
பசுமை / சுற்றுச்சூழல்

உலகின் மிகச் சிறந்த 7 மீன்வளங்கள் கொண்ட இடங்கள்!

A.N.ராகுல்

உலகின் மிகவும் வசீகரமான மீன்வளங்களை ஆராய்வதன்மூலம் நீர்வாழ் உயிரினங்களை நம்மால் நேரில் கண்டு ரசிக்க முடியும். இப்படி நீருக்கடியில் உள்ள அதிசய நிலங்கள், நீர்வாழ் உயிரினங்களின் வகைகளையும் அவற்றின் தனித்துவமான அம்சங்களோடு மெய்சிலிர்க்க வைக்கும் சில கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒகினாவா சுராமி மீன்வளம் (Okinawa Churaumi Aquarium) - ஒகினாவா, ஜப்பான்:

Okinawa Churaumi Aquarium

குரோஷியோ தொட்டி(Kuroshio Tank):

7,500 கன மீட்டர்(cubic meters) தண்ணீரைத் தாங்கி நிற்கும் பிரமாண்டமான குரோஷியோ தொட்டி இந்த மீன்வளத்தின் மையப் பகுதியாகும். இதன் சிறப்பம்சமே தெளிவாகத் தெரியும் நீரின் ஆழத்தில், நீங்கள் திமிங்கல சுறாக்கள் (Whale Sharks), ஆனைத் திருக்கைகள் (manta rays), காளை சுறாக்கள் (bull sharks) மற்றும் 80க்கும் மேற்பட்ட பவழ வகைகளைப் பார்ப்பீர்கள்.

திமிங்கல சுறாக் கென்று ஒரு மிகப்பெரிய தொட்டி இங்குள்ளதே இதன் சிறப்பம்சம்.

எஸ்.இ.ஏ. மீன்வளம் (S.E.A. Aquarium) - சிங்கப்பூர்:

S.E.A. Aquarium

சிங்கப்பூர், சென்டோசா தீவில் (Sentosa Island) அமைந்துள்ள எஸ்.இ.ஏ. மீன்வளம் பார்வையாளர்களைச் சொர்க்கத்தில் மூழ்கடிக்கிறது.

திறந்த கடல் தொட்டி:

மனதைக் கவரும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீருடன் ஒரு தொட்டியை உங்களால் ரசிக்க முடியும். அதுதான் ஓபன் ஓஷன் டேங்க். சுறாக்கள், திருக்கைகள் (rays) மற்றும் ராட்சத உயிரினங்களின்(giant groupers) இருப்பிடம். இந்தக் காட்சியின் மொத்த அளவே உங்களைப் பிரமிப்பில் ஆழ்த்திவிடும்.

டால்பின் தீவு:

பயிற்சி பெற்ற டால்பின்கள் விளையாடுவதைப் பார்க்க வேண்டுமா? மனதை மயக்கும் டால்பின் கண்காட்சியை இங்கு காணலாம்.

ஜார்ஜியா அக்வாரியம் (Georgia Aquarium) - அட்லாண்டா, அமெரிக்கா:

Georgia Aquarium

ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள ஜார்ஜியா மீன்வளம், மேற்கு அரைக்கோளத்தில் (Western Hemisphere) உள்ள மிகப்பெரிய மீன்வளம் என்ற பெயரைக் கொண்டுள்ளது.

திமிங்கல சுறாக்கள்:

இந்த ராட்சச உயிரினங்கள் தங்கள் இருப்பை கலிபோர்னியா கடல் சிங்கங்கள் (Sealion) மற்றும் பெலுகா திமிங்கலங்களுடன் (Beluga whale) பகிர்ந்துகொள்கின்றன. இந்த ஜார்ஜியா மீன்வளம்தான் ஆசியா கண்டத்திற்கு வெளியே திமிங்கல சுறாக்களுக்கென்று இருப்பிடத்தைக் கொண்டுள்ள ஒரே இடம்.

ஓசியானோகிராஃபிக் (Oceanografic), வலென்சியா, ஸ்பெயின்:

Oceanografic

பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள்:

110,000 சதுர மீட்டர் பரப்பளவில் 500க்கும் மேற்பட்ட கடல் இனங்கள் இந்த மீன்வளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பாவிலேயே மிக நீளமான அக்வேரிய சுரங்கப்பாதை:

துடிப்பான மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களால் சூழப்பட்ட மயக்கும் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.

Monterey Bay Aquarium - கலிபோர்னியா, அமெரிக்கா:

Monterey Bay Aquarium

கெல்ப் காடு (Kelp Forest):

கடலுக்கு அடியில் உள்ள மயக்கும் கெல்ப் காடுகளின் ஊடே, கடல் நீர் நாய்கள் (Sea Otters) விளையாடும் அழகை நம்மால் கண்டு ரசிக்க முடியும்.

ஜெல்லிமீன் கேலரி:

இங்குள்ள மெய்சிலிர்க்க வைக்கும் ஜெல்லிமீன் (Jelly Fish) கேலரி உங்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

துபாய் மீன்வளம் & நீருக்கடியில் உயிரியல் பூங்கா - UAE:

Dubai Aquarium & Underwater Zoo

மீன் சுரங்கப்பாதை:

சுறாக்கள், திருக்கைகள் மற்றும் வண்ணமயமான மீன்களால் சூழப்பட்ட 48 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக நாம் நடந்து செல்ல வேண்டும்.

நீருக்கடியில் உயிரியல் பூங்கா:

மீன் வளத்திற்கு மேலே உள்ள மிருகக்காட்சி சாலையில், ராட்சத சிலந்தி நண்டு( giant spider crab) போன்ற தனித்துவமான இனங்களைக் காணலாம்.

ஜெனோவா மீன்வளம்: (Aquarium of Genoa) - இத்தாலி:

Aquarium of Genoa

பல்லுயிர் பெருக்கம் (Biodiversity Galore):

70 க்கும் மேற்பட்ட தொட்டிகளுடன், இந்த மீன்வளம் பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. இதில் டால்பின் இருப்பிடம் தனித்துவமானது.

பெங்குவின் கடற்கரை:

பெங்குவின்கள் தங்களின் பிரத்யேக வாழ்விடத்தில் அழகாக நீந்துவதை நம்மால் ரசிக்க முடியும்.

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT