Midway Islands 
பசுமை / சுற்றுச்சூழல்

2 மில்லியன் கடல் பறவைகள் கூடுகட்டும் இடம் எங்குள்ளது தெரியுமா?

தேனி மு.சுப்பிரமணி

ஹவாய் தீவுக் கூட்டத்தின் வடமேற்கு எல்லையில் ஹொனலுலுவிற்கும் டோக்யோவிற்கும் இடையே, வடக்கு பசிபிக் பெருங்கடலில் 6.2 சதுர கிலோ மீட்டர் 92.4 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள பவளப்பாறைகள் கொண்ட தீவு மிட்வே பவளப் பாறைகள் என்றும் மிட்வே தீவுகள் (Midway Islands) என்றும் அழைக்கப்படுகின்றன.

இத்தீவுகள் வடக்கு அமெரிக்காவிற்கும், ஆசியாவிற்கும் ஏறத்தாழ நடுவிலும், ஐக்கிய ராச்சியம் எனப்படும் இங்கிலாந்தின் கிரீன்விச்சிலிருந்து உலகின் சரிபாதிக்கு இருப்பதாலும் மிட்வே தீவுகள் என்றழைக்கப்படுகின்றன.  

ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாக இருக்கும் இத்தீவு, பன்னாட்டு நாள் கோட்டிலிருந்து கிழக்கே 140 கடல் மைல் (259 கி.மீ; 161 மைல்) தொலைவிலும், சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே ஏறத்தாழ 2,800 கடல் மைல் (5,200 கிலோ மீட்டர்; 3,200 மைல்) தொலைவிலும், டோக்யோவிற்குக் கிழக்கே 2,200 கடல் மைல் (4,100 கிலோ மீட்டர்; 2,500 மைல்) தொலைவிலும் உள்ளது.

இது மோதிரம் போன்ற பவளப்பாறை தடுப்புடன் பல தீவுத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மணல் தீவு 1200 ஏக்கர், கிழக்குத்தீவு 334 ஏக்கர் (135 ஹெக்டேர்), ஸ்பிட் தீவு 15 ஏக்கர், மிட்வே பவளப்பாறை 1540 ஏக்கர், லகூன் 14800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மணல் தீவில் சுமார் அமெரிக்க மீன் மற்றும் வனவிலங்கு சேவையின் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 50 பேர் வாழ்கின்றனர். 

மிட்வே அட்டோல் தேசிய வனவிலங்கு புகலிடத்தில், பொதுவாக இருபத்தி ஒரு வகை கடற்பறவைகள் காணப்படுகின்றன. அவற்றில், 19 இனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இத்தீவுகளில் கூடு கட்டுகின்றன. உலகின் மிகப்பெரிய அல்பாட்ராஸ் காலனி, மிட்வே அட்டோலில் 1.5 மில்லியன் பறவைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கூடு கட்டும் கடல் பறவைகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 2 மில்லியன் பறவைகள் மிட்வேயில் இருக்கின்றன.

மிட்வேயில் கூடு கட்டும் பல்வேறு கடற்பறவை இனங்கள் தங்கள் முட்டைகளை இடுவதற்கு, தரை, திறந்தவெளி அல்லது தாவங்களின் கீழ்பரப்பு அல்லது மேற்பரப்பு, புதர்கள் அல்லது உயரமான மரங்கள் என்று வெவ்வேறு தளங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வரையறுக்கப்பட்ட வாழ்விடத்தைப் பிரித்துக் கொள்கின்றன. மிட்வேயின் பூர்வீக (அல்லது பூர்வீக) பறவை, விலங்கினங்களில் ஒரு சிறிய வகை ஆர்க்டிக் கூடு கட்டும் கரையோரப் பறவைகளும் அடங்கும். 

ஒவ்வொரு ஆண்டும், மிட்வே கடற்கரையில் 90 சதவீதம் நெகிழிக் குப்பைகள் ஒதுங்குகின்றன. இந்தக் குப்பைகள் தீவிலுள்ள பறவை இனத்திற்கு ஆபத்தானதாகவே இருக்கின்றன.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT